இந்தியா சில நடைமுறைகளில் உலக நாடுகளை முன்னேடுத்துச் செல்லும் நிலையில் உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா சில நடைமுறைகளில் உலக நாடுகளை முன்னேடுத்துச் செல்லும் நிலையில் உள்ளது
-பிரதமர் நரேந்திர மோடி

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம், 
மு.வ.கலைமணி

வரணாசி, ஜன.22-
     இந்தியா சில தொழில்கள, நடைமுறை விவகாரங்களில்  உலக நாடுகளை முன்னேடுத்துச் செல்லும் நிலையில் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக அனைத்துலக சூரிய சக்தி திட்டத்தில் உலக நாடுகளை இந்திய முன்னேடுத்துச் செல்லும். "ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே இலக்கு" என்ற நிலையில்  உலக நாடுகளை இந்திய முன்னேடுத்துச் செல்லும் என்று உத்திர பிரதேசம், வரணாசியில் 15ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய போது நரேந்திர மோடி அவ்வாறு சொன்னார்.


இந்தியா சில தொழில்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பலவற்றை செயல்படுத்தி வருகிறது.

 இன்னும் பல விஷயங்களில் இந்தியா  உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் என்று என்றார் நரேந்திர மோடி.

மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத் தமது சிறப்புரையில்  இந்தியாவின் நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

 இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளை ஒட்டியே அந்த பாராட்டு இருந்தது. இந்தியாவின் எதிர்கால இலக்கு என்ன என்பதை உலக நாடுகளுக்கு உணர்ந்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 "இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு"  என்ற கருபொருளுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா  சுவராஜ், உத்திர பிரதேச முதலைச்சர் யோகி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Comments