பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பிறந்தாளை முன்னிட்டு பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ் ரிசோர்சஸ் வழங்கியது

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பிறந்தாளை முன்னிட்டு பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் 
எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ் ரிசோர்சஸ் வழங்கியது

செய்தி:
குணாளன் மணியம்
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஜன.19-
 பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்தின் சார்பில் பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள பார்வையற்றவர்கள் இல்லத்தைச் சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்களான எம்ஜிஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி மற்றும் புரட்சி மைந்தன் சிங்கப்பூர் எம்ஜிஆர் இருவரும் தெரிவித்தனர்.மக்கள் திலகம் தன்  பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மக்களும் தனது கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பது எம்ஜிஆர் விருப்பம். அவரின் கொள்கையை தாங்களும் பின்பற்றி ஆண்டுதோறும் இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருவதாகவும் தற்போது மூன்றாவது ஆண்டாக இந்த அன்னதானம் வழங்குவதாகவும் அவர்கள் கூறினர்.


இந்த அன்னதான நிகழ்வு பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள பார்வையற்றவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இந்த இல்லத்தில் இருக்கும் 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

எம்ஜிஆர் புரோடாக்‌ஷன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்தின் சார்பில்  எம்ஜிஆர் லெஜண்ட் 4 வரை  மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எம்ஜிஆர் லெஜண்ட் 4 நிகழ்வு 2020இல் தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்வில் எமஜிஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி, சிங்கப்பூர் எம்ஜிஆர் இருவரும் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து படத்திற்கு முன்னே வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு ஏற்றி அனிச்சல் வெட்டி எம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.இந்நிகழ்வுக்கு பொன்மன செல்வர் டாக்டர் வெங்கட்ராமன், பொன்மன செல்வர் எம்.ஆர் கிருஷ்ணன், தமிழ்ப் பண்பாட்டுத் தலைவர் ப.கு.சண்முகம்,பொன்மனச் செல்வர் ஐயாசாமி, பார்வையற்ற பாடகர் நாகா, சிங்கப்பூரைச் சேர்ந்த ஐயா வேலு, ஐயா காளிமுத்து ஆகியோர் ஆதரவு வழங்கினர்


. இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் எம்ஜிஆர் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments