மலேசியா- இந்தியா இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த ம.இ.கா பிரவாசி மாநாட்டை பாலமாக பயன்படுத்தும்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் உறுதி!

மலேசியா- இந்தியா இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த ம.இ.கா பிரவாசி மாநாட்டை பாலமாக பயன்படுத்தும்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் உறுதி!

இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம்

வரணாசி, ஜன.24-
       மலேசியா- இந்தியா   
இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த ம.இ.கா பிரவாசி மாநாட்டை ஒரு பாலமாக பயன்படுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் உறுதியளித்துள்ளார்.

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு தொடங்கப்பட்ட 2003இல் இருந்து அப்போதைய ம.இ.கா தலைவர் துன் டாக்டர் சாமிவேலு  மலேசிய இந்தியர்களுக்கு பிரவாசி மாநாடு வழி ஒரு அணுக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தார்.
ஆண்டுதோறும் நடைபெறும் பிரவாசி மாநாட்டில் மலேசிய இந்தியர்களை கலந்து கொள்ளச் செய்த பெருமை துன் சாமிவேலு அவர்களையே சாரும்.
இந்த உறவை தொடரச் செய்வது தமது கடமை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது உறுதியளித்ததாக  தேசம் வலைத்தளத்திடம் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வரணாசியில் நடைபெறும் 15ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ம.இ.கா சார்பில் 240 பேராளர்கள் கலந்து கொண்ட தகவலையும் தாம் இப்போது ம.இ.கா கட்சித் தலைவராக இருக்கும் தகவலையும் மோடியிடம் தெரிவித்த டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு பிரதமர் மோடி நன்கு அறிமுகமானவர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்து பிரதமர் மோடியும் மொரிஷியஸ் நாட்டை பிரதிநிதித்து பிரதமர் பிரவின்குமார் ஜெகநாத்தும் கலந்து கொண்ட நிலையில் மலேசியாவை பிரதிநிதித்து மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

ம.இ.கா தற்போது எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளதானது டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மற்றும் ம.இ.காவின் பலத்தை நிரூபித்துள்ளது.

பிரவாசி மாநாட்டில் பேரா ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்கும் உரிய அமரும் இடம் கிடைக்காத நிலையில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் இந்திய அதிகாரிகளிடம் அவர்களின் பதவியைச் சொல்லி உரிய இடத்தில் அமர வைத்த நிலையில் ஆளுங்கட்சியான நம்பிக்கை கூட்டணி சார்பில் இந்திய அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments