கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வேட்பாளர் யார்? முகமட் ஹசான் வியாழக்கிழமை அறிவிப்பார்! -டான்ஸ்ரீ .ஏ.விக்னேஷ்வரன்

கேமரன் மலை இடைத்தேர்தலில்
தேசிய முன்னனி வேட்பாளர் யார்?
முகமட் ஹசான் வியாழக்கிழமை அறிவிப்பார்!
-டான்ஸ்ரீ .ஏ.விக்னேஷ்வரன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.8-
        கேமரன்மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வேட்பாளர் யார் என்பதை அதன்  தலைவர்  முகமட் ஹசான் வியாழக்கிழமை அறிவிப்பார் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி மிகவும் முக்கியம். இதற்காக ம.இ.கா நல்லதொரு முடிவை தேசிய முன்னனியிடம் தெரிவித்து விட்டோம்.கேமரன் மலை  வேட்பாளர் யார் என்பதை தேசிய முன்னனி தலைவர்  வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அவசர மத்திய செயலவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

கேமரன் மலையில் ம.இ.கா போட்டியிடுமா என்ற கேள்விக்கு வியாழக்கிழமை வரை காத்திருங்கள் என்றும் தற்போதைக்கு தேசிய முன்னனியின் வெற்றிதான் முக்கியம் என்ற அடிப்படையில் ம.இ.கா முடிவு அமைந்திருக்கும். நாங்கள் அம்னோவிடம் தொகுதியை கொடுத்துவிடவில்லை. மாறாக தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றிக்காக நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறோம் என்றார் விக்னேஷ்வரன்.

இப்போதைக்கு ம.இ.கா வலுப்பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கேமரன் மலை தொகுதி குறித்து மத்திய செயலவை எடுத்துள்ள முடிவு ம.இ.கா நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளதாக மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments