வெளிநாட்டில் நாம் ஏன் விரோதியாக இருக்க வேண்டும்? அடுத்த பிரவாசி மாநாட்டுக்கு இணைந்து பதிவு செய்வோம்!டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டில் நாம் ஏன் விரோதியாக இருக்க வேண்டும்?
அடுத்த பிரவாசி மாநாட்டுக்கு இணைந்து பதிவு செய்வோம்!டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்களுக்கு அழைப்பு

வரணாசியில் இருந்து குணாளன் மணியம்

வரணாசி, ஜன.22-மலேசியாவில் எதிர்கட்சியாக இருந்தாலும் இந்தியர் என்ற அடிப்படையில்  அடுத்த பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டிற்கு இணைந்து பதிவு செய்வோம் என்று நம்பிக்கை கூட்டணி இந்திய தலைவர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் மலேசியாவில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக இருப்போம். இது அங்கு. இங்கு நாம் மலேசிய இந்தியர்களாக ஒன்றுபடுவோம் என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்க முக்கிய தலைவர்களுக்கு பிரவாசி மாநாட்டில் உரிய அமரும் இடம் கிடைக்காதது குறித்து கருத்துரைக்கையில் மலேசிய மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு கூறினார்.

பிரவாசி மாநாட்டில் பேரா ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்கும் உரிய இடம் கிடைக்காத நிலையில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அதிகாரிகளிடம் அவர்களின் பதவியைச் சொல்லி உரிய இடத்தில் அமர வைத்ததாக தெரிகிறது.

"வெளிநாட்டில்  நமக்குள் ஏன் பிரிவினை? இந்தியர் நலனுக்கு இணைந்து செயல்படுவோம். மலேசியாவில் நிலை வேறு. வெளிநாட்டில் நிலை வேறு.

ADVERTISEMENT ADVERTISEMENT

ஆகையால், அடுத்த பிரவாசிக்கு இந்தியர் நலனுக்கு இணைந்து செயல்படுவோம் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

வரணாசியில் நடைபெறும் 15ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ம.இ.கா சார்பில் 240 பேராளர்களும் பிகேஆர் சார்பில் நூறுக்கும் மேற்பட்ட பேராளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments