பக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது! தைப்பூசத் திருவிழா தொடங்கியது!

பக்தர்கள் புடைசூழ வெள்ளிரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது!
தைப்பூசத் திருவிழா தொடங்கியது!

செய்தி:
முகேஸ்வரன் குணாளன்
படங்கள் : ஹரிஸ்ரீநிவாஸ் குணாளன்

பத்துமலை, ஜன.20--
        பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு புறப்பட்ட வெள்ளிரதம் இன்று மாலை 4.00 மணிக்கு பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது.

தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

வெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேல் வேல் வேல் என்ற முழக்கத்துடன் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது.

பக்தர்கள் பலர் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற வெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் பால்குடம் ஏந்தி வந்தனர்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இந்நிலையில் பத்துமலை திருத்தலத்திற்கு வெள்ளிரதம் வந்தடைந்தவுடன் ஸ்ரீமகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா
 கொடியேற்றி தைப்பூசத் திருவிழா  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தைப்பூசத் திருவிழா நீண்ட விடுமுறையில் கொண்டாடப்படவிருப்பதால்  16 லட்சம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ  ஆர்.நடராஜா கூறியிருந்தார்.

இந்து சமய விழாவான தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டிருந்தார்.

Comments