மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு 2019! பேராளர்கள் பிப்ரவரி 10ஆம் நாளுக்குள் பதிவு செய்து கொள்ள கோரிக்கை

மலேசியாவில் லகத் திருக்குறள் மாநாடு 2019!
பேராளர்கள் பிப்ரவரி 10ஆம்  நாளுக்குள் பதிவு செய்து கொள்ள கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.7-
        பேராளர்கள் மலேசியாவில்
உலகத் திருக்குறள் மாநாடு 2019
உலக மானுட வாழ்க்கையின் தத்துவத்தை, பண்பாட்டு வாழ்வை, தனிமனித ஒழுக்கத்தை எடுத்துரைக்கும் வாழ்வியல் இலக்கியமாக விளங்கும் உலகப் பொதுமறையான திருக்குறளின் மாண்பினை உணர்த்தும் நோக்கத்தோடு உலகத் திருக்குறள் மாநாடு 2019 மலேசியாவில் நடத்தப்படுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 22,23,24 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்களுக்கு கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. 
தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் மலேசியாவிலுள்ள பல பொது இயக்கங்கள் இணைந்து இம்மாநாட்டினை ஏற்பாடு செய்கின்றன.


தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, மொரிசியஸ், அமெரிக்கா மற்றும் மலேசிய உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலிருந்து சுமார் 600 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். பல தமிழறிஞர்கள் திருக்குறள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளையும் இம்மாநாட்டில் படைப்பார்கள்.   
அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினராகக் கிழ்க்கண்டவர்கள் தேர்வு பெற்றனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

ஆலோசகர்கள் : திரு. பெ. இராஜேந்திரன் ( மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ), முனைவர் திரு. ம. மன்னர்மன்னன் (  மலேசியத் தமிழ் எழுத்தாளர் முன்னாள் தலைவர் ), டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் (மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை), முனைவர் திரு. கிருஷ்ணன் மணியம் (மலாயா பல்கலைக்கழகம்), டத்தோ முனைவர் துரைசாமி (பினாங்கு)
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் : மணிக்கவிஞர் ந.கு.முல்லைச்செல்வன், துணைத்தலைவர் : திரு. வி. ஜெகநாதன், உதவித் தலைவர்கள்: கவிஞர் தமிழ்ச்செல்வம் காத்தமுத்து, மன்னன் ஆசிரியர் திரு. எஸ்.பி. அருண், “திருக்குறள் சுடர்” திரு. அம்பாங் சுப்ரா, செயலாளர்  : திருமதி வத்சலா விஜேந்திரன், துணைச்செயலாளர் : கவிஞர் துரை. முனியாண்டி, 

பொருளாளர்:  திரு. எம். இராஜன், துணைப்பொருளாளர் : திருமதி பொன். இலட்சுமி, 
செயலவை உறுப்பினர்கள் : திரு. ஞான சைமன், திரு. மோகனன் பெருமாள், திரு. க. முருகன் ( சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி முன்னாள் அமைப்பாளர்), திரு. ஏ. குணநாதன், கவிஞர் பெ. கந்தசாமி, கவிஞர் ஜோசப் செபஸ்டியன், திரு. சீரியநாதன், திரு. ஜோன்சன் விக்டர், கவிஞர் சக்திதாசன், திருமதி இராசி. தமிழரசி, திருமதி தேவி, திரு. டி.எஸ். குணா, திரு. அர்வின்குமார், திரு. லோகேந்திரன், திரு. பெருமாள் (சிரம்பான்), திரு. கி. மணிமாறன்.

பேராளர்கள் 
இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவர்கள் பேராளர் கட்டணம் வெ. 100.00 செலுத்தவேண்டும். உணவு, மாநாட்டுப் பை, மாநாட்டுச் சிறப்பிதழ், போன்றவை வழங்கப்படும்.
தங்குமிடம் வேண்டுவோர் இரண்டு இரவுகளுக்கு வெ. 100.00 செலுத்த வேண்டும் (ஓர் அறையில் இருவர் தங்கவைக்கப்படுவார்கள்).
பேராளர்களாக பதிவு செய்வதற்கு இறுநாள் : 10.2.2019
மேல்விபரங்களுக்கு +60132767676 (முல்லைச்செல்வன்) / +6012-5555270 (ஜெகன்) / +60164174293 (வத்சலா)

Comments