சினி சத்ரியா புரொடாக்‌ஷன்ஸ் தயாரிப்பில் "குற்றம் செய்யேல்"! மலேசிய திரையரங்குகளில் மார்ச் 7 முதல் திரையேறும்

சினி சத்ரியா புரொடாக்‌ஷன்ஸ்  தயாரிப்பில் "குற்றம் செய்யேல்"! 
மலேசிய திரையரங்குகளில் மார்ச் 7 முதல் திரையேறும்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.22-
       சினி சத்ரியா படநிறுவனம் சார்பில் டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் "குற்றம் செய்யேல்" திரைப்படம்  நாடு தழுவிய நிலையில் மார்ச் 7 தொடங்கி திரையேறவிருக்கிறது.

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம்
ஒரு குண்டர் கும்பல் பற்றிய  கதையாகும்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட திரைப்படமாகும்.

 இதில் தென்னிந்திய நடிகரான போஸ் வெங்கடேஷ், விஜய் டிவி "கலக்கப் போவது யாரு" தீனா, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா ஆகிய மூவரும் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்துள்ளனர்.


இந்த குற்றம் செய்யேல் திரைப்படம் குறித்து டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளர் மாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 முதல் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறவிருப்பதால்  மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்கும்படி கவிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments