சினி சத்ரியா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் "குற்றம் செய்யேல்"! நாடு தழுவிய நிலையில் மார்ச் 7 முதல் திரையேறவுள்ளது

சினி சத்ரியா புரொடக்‌ஷன்ஸ்  தயாரிப்பில்
குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் "குற்றம் செய்யேல்"! 
நாடு தழுவிய நிலையில் மார்ச் 7 முதல் திரையேறவுள்ளது

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.6-
         இந்நாட்டில் திரைப்படத்துறை அபார வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாத அளவிற்கு மலேசிய திரைப்படத் துறையில் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் புத்தம் புது கலைஞர்களை வரவேற்று கொண்டுதான் இருக்கிறது.ஒரு விவேகக் கைப்பேசியில் சில மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்து பார்க்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் விவேகக் கைப்பேசியில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு நமது கலைத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது. மலேசிய கலைத்துறையின் இந்த அபார வளர்ச்சியில் சினி சத்ரியா படநிறுவனமும் பங்கு கொண்டுள்ளது.மலேசிய திரைப்படங்கள் இந்திய திரைப்படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டுத் திரைப்படமா தென்னிந்திய திரைப்படமா என்று கேட்கும் அளவிற்கு   மலேசிய திரைப்படங்கள் தனி இடத்தை எட்டிப் பிடித்துள்ளன.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அந்த வகையில் மலேசியத் திரைப்படத்துறையில் சரித்திரம் படைத்து வருகிறது சினி சத்ரியா திரைப்பட நிறுவனம்.
ஒரு மருத்துவராக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் செல்வா தம்முடைய திரைப்பட ஆர்வத்தை படத்தயாரிப்பு மூலம் தீர்த்து கொண்டு வருகிறார்.

"தற்காப்பு" திரைப்படத்தில் தொடங்கிய இவரது கலைப்பயணம் " நான் கபாலி அல்ல" "குற்றம் செய்யேல்", "தமனி" தொடர்ந்து வருகிறது. சினி சத்ரியா சார்பில் டாக்டர் செல்லா, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா தயாரிப்பில் "குற்றம் செய்யேல்" திரைப்படம்  நாடு தழுவிய நிலையில் மார்ச் 7 தொடங்கி திரையேறவிருக்கிறது.

குற்றம் செய்யேல் டிரெய்லர்

https://youtu.be/fqWGK12RDys

Kuttram Seiyeal Official Trailer

 இந்த திரைப்படம் குறித்து இதன் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா நம்மோடு மனம் திறந்தனர்.இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டது. "தற்காப்பு" திரைப்படத்திற்கு பிறகு நல்ல அனுபவம் கிடைத்தது. அதன்பிறகு "நான் கபாலி அல்ல" திரைப்படத்தை தயாரித்தோம். அதன்பிறகு "குற்றம் செய்யேல்" திரைப்படத்தை தயாரித்து தற்போது அது வெளிவரும் தருவாயில் உள்ளது என்றார் டாக்டர் செல்வா.

டாக்டர் செல்வா திரைப்படத்தயாரிப்பில் மட்டுமன்றி  நடிப்புத் துறையிலும் முழு ஈடுபாட்டைக் காட்டி தம்மை ஒரு நடிகராகவும் உருமாற்றிக் கொண்டுள்ளார்.

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் குறித்து இதன் இயக்குநரும் இணை தயாரிப்பாளருமான துடிப்புமிக்க இளைஞரான பாரதிராஜா தமது எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் "குற்றம் செய்யேல்". இத்திரைப்படம் குண்டர் கும்பல் பற்றிய ஒரு கதையாகும். கல்லூரி மாணவ  இளைஞர்கள் சிலருக்கு அக்கல்லூரி நிர்வாகம் இரண்டு பிரிவுகளாக ஆய்வு வேலை ஒன்றை வழங்குகிறது. இதில் ஒரு இளைஞர் குழுவினர் குண்டர் கும்பல் குறித்து ஆய்வு நடத்த செல்கின்றனர். இந்நிலையில் மற்றொரு குழு  காவல்துறை குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த சூழலில் உண்மையான காவல்துறை குண்டர் கும்பலையும் அதன் நடவடிக்கைகளையும் எப்படி கையாண்டு தீர்வு காண்கின்றனர் என்பதுதான் கதைச்சுறுக்கம் என்று பாரதிராஜா தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய நடிகரான போஸ், விஜய் டிவி "கலக்கப் போவது யாரு" தீனா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்திருக்கிறார்கள். இதில் மேலும் பல மலேசிய புதுமுகக் கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கவர் ரஜினி செம். இத்திரைப்படம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டாக்டர் செல்வா தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளர் பாரதிராஜா. இத்திரைப்படத்தை பாரதிராஜா, வெங்கடேஷ் இயக்கியுள்ளனர். "குற்றம் செய்யேல்" திரைப்படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இத்திரைப்படத்திற்கு நான் கபாலி அல்ல இசையமைப்பாளர் அர்வின் ராஜ் இசையமைத்துள்ளதாக பாரதிராஜா நம்மிடம் விவரித்தார்.

இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 முதல் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறவிருக்கிறது. இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படமாக  மலேசிய ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது. மலேசிய ரசிகர்கள் "குற்றம் செய்யேல்" திரைப்படத்திற்கு வற்றாத ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

"குற்றம் செய்யேல்" திரைப்படம் வெற்றிநடை போட தேசம் வாழ்த்துகிறது.

Comments