தமிழ்ப்பத்திரிகைகளின் இக்கட்டான சூழல்! இனியும் டிச்ஆர் ராகா உதயா வெந்த புண்ணில் பாய்ச்சக்கூடாது! மக்கள் ஓசை தலைமை ஆசிரியர் மு.ஆர்.பாலு எச்சரிக்கை

தமிழ்ப்பத்திரிகைகளின்  இக்கட்டான சூழல்!
 இனியும் டிச்ஆர் ராகா உதயா வெந்த புண்ணில் பாய்ச்சக்கூடாது!
மக்கள் ஓசை தலைமை ஆசிரியர் மு.ஆர்.பாலு எச்சரிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.2- தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அரணாக இருக்கும் தமிழ்ப்பத்திரிகைகள் தற்போது ஒரு இக்கட்டான சூழலை எதிர்நோக்கி வரும் சூழலில் இனியும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உதயாவின் நடவடிக்கை இருக்கக் கூடாது என்று மக்கள் ஓசை பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மு.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்ப்பத்திரிகைகளின் எதிர்காலம், அதன் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நேயர் பேசுகிறார் என்பதற்காக அவரோடு சேர்ந்து தமிழ்ப்பத்திரிகைகளை சாடுவது முறையல்ல. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

உதயா மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லாம் முடிந்தது என்றாகிவிடாது. மாறாக தாம் செய்தது முற்றிலும் தவறு என்பதை உதயா உணர வேண்டும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் மு.ஆர் பாலு தெரிவித்தார்.

மக்கள் ஓசை பத்திரிகை வழி நாங்கள் அனைத்து இது தொடர்பான அனைத்து  செய்திகளையும் வெளியிட்டோம். உதயாவின் விளக்கத்தையும் வெளியிட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் உதயா பார்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் மனம் ஆற, மாற உதயாவின் நடவடிக்கை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதன் பின்விளைவுகளை உதயா சந்திக்க வேண்டியிருக்கும் என்று மு.ஆர் பாலு எச்சரிக்கை விடுத்தார்.

Comments