பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பத்துகேவ்ஸ் சிவானந்தா ஆசிரமத்தில் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பத்துகேவ்ஸ் சிவானந்தா ஆசிரமத்தில் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், பிப்.9-
       பிரபலங்கள் பலர் தங்கள் பிறந்த நாளை பிரமிக்க வைக்கும் அளவுக்கு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் பத்துகேவ்ஸ் சிவானந்தா ஆசிரமத்தில் பிள்ளைகளுடன் தமது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்திருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக போட்டியிட தயாராகிவிட்ட நிலையில் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் தியான் சுவா, கெஅடிலான் கட்சியின் ஆதரவில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் 24 வயது இளைஞரான பிரபாகரன்.

இளைஞர்களின் எண்ணம் எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது. இந்த வயது இளைஞர்கள் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். ஆனால், இளைஞர் பிரபாகரன் இதற்கு நேர்மாரானவர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

வழக்கறிஞர் தொழிலுக்கு படித்து வரும் இவர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தமது நடவடிக்கை அனைத்தையும் மக்களுக்காகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பிரபாகரன் பிப்ரவரி 8 வெள்ளிக்கிழமை தமது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவர் தமது பிறந்தநாளை தடபுடலாக விருந்து வைத்து கொண்டாடி மகிழாமல் பத்துகேவ்ஸ் சிவானந்தா ஆசிரமத்திற்கு காலை 11.30 மணிக்கு சென்று அங்கு நடைபெற்ற பூசையில் கலந்து கொண்டு பிறகு அங்கிருந்து பிள்ளைகளுக்கு உணவளித்து ஜனவரி, பிப்ரவரியில் பிறந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

இதுகுறித்து பிரபாகரனிடம் கேட்ட போது, தாம் சிவானந்தா ஆசிரமத்திற்கு ஒரு தொண்டூழியராக பல ஆண்டுகள் இருந்து வந்ததாகவும் அங்கு வரும் ஏழைப் பிள்ளைகளுடன் தொடர்பு இருந்ததால் அவர்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியதாகவும் பிரபாகரன் நம்மிடம் சொன்னார்.

இத்தகைய நல்ல சிந்தனை மற்ற இளைஞர்களுக்கும் வர வேண்டும். பிரபாகரன் நீடு வாழ தேசம் வாழ்த்துகிறது!

Comments