துபாயில் சிக்கிய இலங்கையர்கள் சிலரின் ரத்த மாதிரியில் போதைப் பொருள்!
மரண தண்டனை நிறைவேற்றப்படுமா..?
துபாய், பிப்.12-
துபாயில் வர்த்தகர் ஒருவர் போதைப் பொருள் பயன்பாட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வர்த்தகர் தலைமையிலான குழுவினர் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாயில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதான வர்த்தகர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவார். 39 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட போது, 31 பேரின் இரத்தத்தில் கொக்கேன் என்ற போதைப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேர் போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடவில்லை என்பது கண்டறியப்பட்டதன் விளைவாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏனைய 31 பேரும் துபாய் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இவர்கள் 14 நாட்களுக்கு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்த அந்நாட்டு சட்டத்தின்படி அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.31 இலங்கையர்களுக்கு எதிராக துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாயின் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நன்றி : நியூலங்கா

Comments
Post a Comment