இந்திரா காந்தி பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் ம.இ.காவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்! சுபாஸ் சந்திரபோஸ் சூளுரை

இந்திரா காந்தி பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் ம.இ.காவின்  குரல் தொடர்ந்து ஒலிக்கும்!
சுபாஸ் சந்திரபோஸ் சூளுரை

கோலாலம்பூர், பிப்.16-
         இந்திரா காந்தி பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் ம.இ.காவின்  குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று ம.இ.கா சுபாஸ் சந்திரபோஸ் சூளுரைத்துள்ளார்.

ம.இ.கா தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட முன் அமைச்சர் குலசேகரன் செய்த வேலையை நாங்கள் செய்கிறோம். எதிர்கட்சியில் இருந்த போது குலசேகரன் ம.இ.கா என்ன செய்கிறது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். இப்போது ஆளுங்கட்சியில் அமைச்சராக இருக்கும் குலசேகரன் ஏன் இந்திரா காந்தி பிரச்சினைக்கு தீர்வு காண முயலவில்லை. இதில் இருந்து முற்றாக விலகிக் கொண்டது அவரது இயலாமையை காட்டுகிறது என்று சுபாஸ் சந்திரபோஸ் தெரிவித்தார்.

இந்திரா காந்தி விவகாரத்தில் நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்திரா காந்தி விவகாரத்தில் ம.இ.கா குரல் என்றும் ஒலிக்கும். ம.இ.கா இதுகுறித்து கேள்வி கேட்கும். ம.இ.கா அரசாங்கத்தில் இருந்த போது செய்த நடவடிக்கையினால்தான் இந்திரா காந்தி வழக்கில் நியாயமான முடிவு கிடைத்தது.

ADVERTISEMENT ADVERTISEMENT

அப்போதைய ம.இ.கா தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இவ்விவகாரம் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இதில் ஒரு வழக்கறிஞராக செயல்பட்ட குலசேகரனுக்கு முக்கியப் பங்குண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் சுபாஸ்.

இந்திரா காந்தி விவகாரத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனின் நடவடிக்கை பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அமைச்சராக இருக்கும் குலசேகரன் நினைத்தால் இந்திரா காந்தி விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், அவர் இவ்விவகாரத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். எனினும் இதுகுறித்து ம.இ.கா அமைச்சர் குலசேகரனையும் அரசாங்கத்தையும் தொடர்ந்து கேள்வி கேட்கும் என்று சுபாஸ் சந்திரபோஸ் குறிப்பிட்டார்.

Comments