தோழமை கட்சிகளின் ஆதரவில் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெறும் -செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன்

தோழமை கட்சிகளின் ஆதரவில் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெறும்
-செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன்

குணாளன் மணியம்

செமினி, பிப்.16-
       தோழமை கட்சிகளின் ஆதரவில் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெறும் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செமினி இடைத்தேர்தல்  ஒரு கடினமாக தேர்தலாக இருந்தாலும் தோழமை கட்சிகள் பகைமை மறந்து மேற்கொள்ளும் தீவிரப் பிரச்சாரம் வெற்றியைத் தேடித்தரும் என்று டத்தோ சம்பந்தன் கூறினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

ஒரு காலத்தில் செமினி சட்டமன்றம் தேசிய முன்னியின் கோட்டையாக விளங்கியது. ஆனால், தேசிய முன்னனி செய்த சில தவறுகளால் ஏற்பட்ட சுனாமி அலையால் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. சிலாங்கூர் மாநிலம் கைமாறிய போதிலும் செமினி தேசிய முன்னனியின் கோட்டையாகவே விளங்கியது. இந்நிலையில்   நம்பிக்கை கூட்டணியின் ஆதரவு தற்போது சரிந்துள்ளது. இதன் அடிப்படையில் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்று டத்தோ சம்பந்தன் சொன்னார்.

இந்த செமினி இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடாமல் தேசிய முன்னனிக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அதேநேரத்தில் பகைமை மறந்து ம.இ.காவுடன் இணைந்து ஐபிஎப் கட்சி, இதர தோழமை கட்சிகளுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கும். இதன்வழி வெற்றி பெற முடியும் என்றார் டத்தோ சம்பந்தன்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இளைய வாக்காளர்களைக் கவர்ந்து விட்டார்கள். இப்போது இளைஞர்கள் அதனை உணரச் தொடங்கி விட்டனர். இந்திய வாக்காளர்களும் தாங்கள் நம்பிக்கை கூட்டணியால் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளதால் தேசிய முன்னனி வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சீன சமூகமும் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மேலும் டத்தோஸ்ரீ நஜீப் துன்

அனுதாப அலையும் இருக்கிறது. செமினி தெஸ்கோவுக்கு  அண்மையில் திடீர் வருகை புரிந்த நஜீப்பிற்கு இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு ஆதரவு வழங்கி படம் பிடிந்தனர். ஆகையால்  நஜீப் மேற்கொள்ளும் பிரச்சாரமும் தேசிய முன்னனி வேட்பாளருக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்புவதாக செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் மேலும் சொன்னார்.

Comments