உலகின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு குறைந்த விலையிலான அண்ட்ரைட் இணையதள தொலைக்காட்சி சேவை தேவையே!

ரவாங் பிரதர்ஸ் எஃசி ஏற்பாட்டில் ஒன்பதின்மர் காற்பந்து போட்டி
ஏற்பாட்டுக் குழுத்தலைவர் விமல்ராஜ் காற்பந்து குழுக்களை பதிவுக்கு அழைக்கிறார்

ரவாங், பிப்.3-
இளைஞர்கள் மத்தியில் காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரவாங் பிரதர்ஸ் எஃசி  ஒன்பதின்மர் காற்பந்து போட்டியை பிப்ரவரி 10ஆம் தேதி நடத்தவிருப்பதாக அதன்
ஏற்பாட்டுக் குழுத்தலைவர் விமல்ராஜ் கூறினார்.

இந்த காற்பந்து விளையாட்டுப் போட்டிக்கு காற்பந்து குழுக்கள் பதிவுக்கு அழைக்கப்படுகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் காற்பந்து குழுக்கள் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளும்படி விமல்ராஜ் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த போட்டி விளையாட்டு பிப்ரவரி 10ஆம் தேதி ரவாங் தாமான் கஞ்சிகங் திடலில் காலை 8.00 மணி தொடங்கி நடைபெறும். இந்தப் காற்பந்து போட்டியில் தங்களை பதிவு செய்து கொள்ளும் குழுக்கள் 200 வெள்ளி பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று விமல்ராஜ் தெரிவித்தார்.

இந்த காற்பந்து போட்டியில் முதல்நிலையில் வெற்றி பெறும் குழுவுக்கு 2 ஆயிரம் வெள்ளியும் இரண்டாம் நிலையில் வெற்றி பெறும் குழுவுக்கு ஆயிரம் வெள்ளியும் மூன்றாம் நிலையில் வெற்றி பெறும் குழுவுக்கு 500 வெள்ளியும் நான்காம் நிலையில் வெற்றி பெறும் குழுவுக்கு 250 வெள்ளியும் வழங்கப்படும். ஆகையால், போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளும்படி விமல்ராஜ் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு தாபோங்-019-3228977, விமல்- 010-2590476, சோமு-012-9057025, தர்வீன்-014-7350877,

Comments