தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசிய உதயாவின் நடவடிக்கைக்கு டிஎச்ஆர் ராகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க செயலாளர் தி.காளிதாசன் கேள்வி
தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசிய உதயாவின் நடவடிக்கைக்கு டிஎச்ஆர் ராகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க செயலாளர் தி.காளிதாசன் கேள்வி
குணாளன் மணியம்
கோலாலம்பூர், பிப்.2-
தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசிய உதயாவின் நடவடிக்கைக்கு டிஎச்ஆர் ராகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் தி.காளிதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு நேயருடன் நடந்த அந்த உரையாடல் ராகாவில் ஒலியேறியதோ இல்லை தமிழ்ப்பத்திரிகைகளை படுமோசமாக விமர்ச்சித்த ஒரு நபரோடு சேர்ந்து கொண்டு உதயாவும் கேவலமாக பேசியது தவறுதான். உதயா கேட்ட மன்னிப்பும் ஒப்புக்காகவே இருந்தது என்று மலேசிய நண்பன் நிருபருமான காளிதாசன் தெளிவுபடுத்தினார்.
ADVERTISEMENT
இந்த விவகாரம் தொடர்பில் டிஎச்ஆர் ராகா இதுவரை மௌனம் சாதித்து வருவது தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால் உதயாவின் நடவடிக்கைக்கு ராகா ஆதரவு தெரிவித்துள்ளதா? டிஎச்ஆர் ராகா நிர்வாகம் உதயா மீது இந்நேரம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாதது ராகாவின் அலட்சியத்தை காட்டுகிறது என்றார் காளிதாசன்.
தமிழ்ப்பத்திரிகைகள் சோறு மடிக்கவும் விரித்துப் போட்டு உட்காரவும்தான் லயக்கு என்று கேவலப்படுத்தி பேசிய ஒரு நேயரோடு சேர்ந்து தமிழ்ப்பத்திரிகைகளை விமர்சித்த உதயா மீது டிஎச்ஆர் ராகா நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளிதாசன் வலியுறுத்தினர்.
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க செயலாளர் தி.காளிதாசன் கேள்வி
குணாளன் மணியம்
கோலாலம்பூர், பிப்.2-
தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசிய உதயாவின் நடவடிக்கைக்கு டிஎச்ஆர் ராகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் தி.காளிதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு நேயருடன் நடந்த அந்த உரையாடல் ராகாவில் ஒலியேறியதோ இல்லை தமிழ்ப்பத்திரிகைகளை படுமோசமாக விமர்ச்சித்த ஒரு நபரோடு சேர்ந்து கொண்டு உதயாவும் கேவலமாக பேசியது தவறுதான். உதயா கேட்ட மன்னிப்பும் ஒப்புக்காகவே இருந்தது என்று மலேசிய நண்பன் நிருபருமான காளிதாசன் தெளிவுபடுத்தினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ்ப்பத்திரிகைகள் சோறு மடிக்கவும் விரித்துப் போட்டு உட்காரவும்தான் லயக்கு என்று கேவலப்படுத்தி பேசிய ஒரு நேயரோடு சேர்ந்து தமிழ்ப்பத்திரிகைகளை விமர்சித்த உதயா மீது டிஎச்ஆர் ராகா நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளிதாசன் வலியுறுத்தினர்.
Comments
Post a Comment