சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவின மக்கள் விழாவாக பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! -டாக்டர் ஹாஜி கமாருடின்

சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவின மக்கள் விழாவாக பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும்!
-டாக்டர் ஹாஜி கமாருடின்

குணாளன் மணியம்

சுங்கை பூலோ, பிப்.13-
        சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவின மக்கள் விழாவாக பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று சுங்கை பூலோ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹாஜி கமாருடின் கூறினார்.
பொங்கல் விவசாயிகளின்  விழாவாக கொண்டாடப்படுவதாக அறிகிறேன். சபாவில் இது போன்ற விழாவை விவசாயிகள் கொண்டாடுகின்றனர். இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் விழாவாக சுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் என்று இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு ஏற்பாட்டில் சுங்கை பூலோ மருத்துவமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் டாக்டர் ஹாஜி கமாருடின் அவ்வாறு தெரிவித்தார்.இந்த பொங்கல் விழா சுங்கை பூலோ மருத்துவமனை கார் நிறுத்த வளாகத்தில் பிப்ரவரி 13 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

 சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி தலைமையில்  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதில் டாக்டர் கமாருடின், டாக்டர் ஷாரா, இந்திய மருத்துவர்கள், மலாய் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்த பொங்கல் விழாவில் டாக்டர் ஹாஜி கமாருடின், பண்டார் பாரு சுங்கை பூலோ ராஜமாரியம்மன் ஆலயத்தின் துணைத் தலைவர் சண்முகம் அகியோருக்கு ரவியும்  சிலாங்கூர் சுகாதார துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஷாராவும் பெண் ஏற்பாட்டாளர் இருவரும் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இந்த பொங்கல் விழா நிகழ்வில் சுங்கை பூலோ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹாஜி கமாருடின், சுங்கை பூலோ காவல் துறை அதிகாரி சுகுமாறன், சிலாங்கூர் சுகாதார துறையின் துணை  இயக்குநர் டாக்டர் ஷாரா, பாரு சுங்கை பூலோ ராஜமாரியம்மன் ஆலயத்தின் துணைத் தலைவர் சண்முகம், சுங்கை பூலோ மருத்துவமனையின் இந்திய மருத்துவர்கள், தாதியர்கள், மலாய் மருத்துவர்கள், தாதியர்கள்,  இந்திய, மலாய் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது .Comments