சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" குறித்து இந்திய சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து, பாராட்டு!

சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" குறித்து இந்திய சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து, பாராட்டு!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.22-
       சினி சத்ரியா படநிறுவனம் சார்பில் டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் மார்ச் 7 தொடங்கி மலேசிய திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கும் "குற்றம் செய்யேல்" திரைப்படம்  குறித்து இந்திய சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

                     

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் சமூக சீர்கெடுகளை படம்பிடித்து

ADVERTISEMENT


 ADVERTISEMENT

காட்டுவதுடன்  அதற்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படமாகும்.மலேசியாவில்
படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென்னிந்திய நடிகரான போஸ் வெங்கடேஷ், விஜய் டிவி "கலக்கப் போவது யாரு" தீனா, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா ஆகிய மூவரும் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்துள்ளனர்.இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 முதல் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறவிருப்பதால்  மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்கும்படி சினிமா நட்சத்திரங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் குறித்து சினிமா நட்சத்திரங்கள் வழங்கிய  வாழ்த்தையும் பாராட்டையும் பாருங்கள்.

                     


Comments