மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் நடன ஆர்வலர்களுக்கான நடன பயிற்சி வகுப்பு விஜய் டிவி கிங்ஸ் ஆப் டான்ஸ் டிரிம் டிம் கலை, ரோக்கி ராஜேஸ் பயிற்சி வழங்குவர் - நடன ஆர்வலர்கள் கலந்து கொள்ள பர்விந்தராஜ் அழைப்பு

மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் நடன ஆர்வலர்களுக்கான நடன பயிற்சி வகுப்பு
விஜய் டிவி கிங்ஸ் ஆப் டான்ஸ்  டிரிம் டிம் கலை, ரோக்கி ராஜேஸ் பயிற்சி வழங்குவர்
- நடன ஆர்வலர்கள் கலந்து கொள்ள பர்விந்தராஜ் அழைப்பு

முகேஸ்வரன் குணாளன்

 கோலாலம்பூர், பிப்.24- 
       மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் கிளப் கலாசேத்ரா ஏற்பாட்டில்  நடன ஆர்வலர்களுக்கான நடன பயிற்சி வகுப்பு நடைபெறவிருப்பதாக கிளப் தலைவர்
பர்விந்தராஜ் சண்முகம் கூறினார்.

மலேசியாவில் நடனக்கலையில் ஆர்வமுள்ளவர்கள், ஈடுபாடு கொண்டவர்கள் தங்கள் நடனத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மார்ச் 1, 2,3 ஆகிய மூன்று நாட்கள் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரையில் நடன பாட வாரியாக நடன வகுப்பு நடைபெறவிருக்கிறது. இந்த நடன பயிற்சி வகுப்பை சென்னை விஜய் தொலைக்காட்சியின் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியின் டிரிம் டிம் நடன குழுவின் நடன பயிற்றுநர்கள் கலை, ரோக்கி ராஜேஸ் இருவரும் நடன பயிற்சி வழங்கவிருப்பதாக பர்விந்தராஜ் தெரிவித்தார்.

நடன புயல் பிரபுதேவாவின் உதவி நடன பயிற்றுநர்களாக இருந்துள்ள இவர்கள் இருவரும் ஐரோப்பிய நாடுகளில் பல நடன பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளனர். அந்த வகையில் மலேசிய பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக பர்விந்தராஜ் சொன்னார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் நடன ஆர்வலர்கள் 30 வெள்ளி பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி அதில் பதிவு செய்ய வேண்டும். அதில் எந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்த நடன பயிற்சி வகுப்புக்கு ஆதரவாளர்களும்  (ஸ்பான்சர்ஸ) வரவேற்கப்படுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் இந்த நடன பயிற்சி வகுப்புக்கு தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கும்படி நடன பயிற்சி வகுப்பு ஏற்பாட்டுக் குழுத்தலைவருமான பர்விந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்புக்கு: பர்விந்தராஜ்-016-4723899

Comments