சொன்ன வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்ட இந்திய அமைச்சர்கள் பொது வாதத்திற்கு வரம் தயாரா? ம.இ.கா சுபாஷ் சந்திரபோஸ் சவால்

சொன்ன வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்ட இந்திய அமைச்சர்கள் பொது வாதத்திற்கு வரம் தயாரா?
ம.இ.கா சுபாஷ் சந்திரபோஸ் சவால்

கோலாலம்பூர், பிப்.24- 
      சொல்லின் செல்வனைப் போல் நடப்போம் என வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த நம்பிக்கை கூட்டணியின் இந்திய அமைச்சர்கள் பொது விவாதத்திற்கு வரத்தயாரா என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவு செயலாளர்  சுபாஷ் சந்திரபோஸ் சவால் விடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்று சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்று மௌனம் சாதித்து வருகின்றனர். இது சரியா என்று சுபாஷ் சந்திரபோஸ் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

சொன்ன வார்த்தைகள் ஞாபகத்தில் உள்ளனவா அல்லது காற்றோடு கலந்தனவா என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். ஆனாலும், ஆழ்ந்த உறக்கத்தில் நம் நான்கு தலைவர்கள் இருக்கின்றனர் என்றார் அவர்.

முதல் கட்டமாக 100 நாட்களில் நாட்டின் அரசியல் நீரோட்டத்தை மறு சீரமைப்பு செய்வோம் என்றனர். ஆனால் 10 மாதங்களாகியும் ஒன்றும் நடக்கவில்லையே. அடுத்த படியாக 300,000 இந்தியர்களின் ஆவண பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றனர். இறுதியில் அவ்வெண்ணிக்கையே தவறானது என ஒப்புக்கொண்டனர்.

ஜிஎஸ்டியை அகற்றுவோம் என்றனர். ஆனால், அகற்றிய பிறகு எஸ்எஸ்டி வரியை மீண்டும் அமல்படுத்தி மக்களை நன்கு ஏமாற்றி விட்டனர். இச்செயல் தட்டில் போட்ட உளுந்து இட்டிலியை எடுத்து விட்டு மசாலா இட்டிலியை வைத்தது போல் உள்ளது என சுபாஷ் சாடினார்.

இந்தியர்களின் அரசு துறை வேளை வாய்ப்பினை 10% சதவீதமாக உயர்த்துவோம் என்றனர். இன்று மனிதவள அமைச்சராக இருப்பவர் கொடுத்த வாக்குறுதியில் இதுவும் ஒன்று. ஆனால், நடந்ததா வேறு. மேலும் ஜிஎல்சி நிறுவனங்களில் இந்தியர்களின் வேலை வாய்ப்பினை 10 சதவீதத்திற்கு உயர்த்துவோம் என்றனர். இன்றைய நிலையில் இவை யாவும் இலவு காத்த கிளி நிலைதானோவென ஆகிவிட்டது என்றார் அவர்.

அடுத்து எம்ஆர்எஸ்எம் பள்ளியில் நமது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், இன்று வாய்ப்புக்கிடைக்க பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எனக் கேள்வியெழுப்பினால் பதில் கூறத்தான் அமைச்சர்கள் இல்லை. இதில் உச்சக்கட்ட பொய்யென்ன வென்றால் தமிழ் இடைநிலைப் பள்ளியாகும். 14ஆவது பொது தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கு திருப்பிய காரணங்களின் முகாமையானது இந்த தமிழ் இடைநிலைப்பள்ளியாகும். ஆனால் இன்றளவும் அதற்கான முயற்சிய எடுக்காது அமைதி காப்பதன் நோக்கம் தான் என்ன. அன்று அப்பள்ளியின் கட்டுமானதிற்கு பினாங்கு மாநில முதல்வர் நிலம் வழங்கியும் தேசிய முன்னணி நிராகரித்தனர் என்றார் அம்மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் பி.ராமசாமி. ஆனால் இன்று மாநிலமும் மத்திய அரசும் அவர்கள் வசம் தானே இருக்கின்றது. அப்படியிருக்க அதை தட்டிக்கழிப்பது யாரை மூடர்களாக்க எடுக்கும் முயற்சி என பி.ராமசாமி தெரிவிக்க வேண்டும் என சுபாஷ் கேட்டுக் கொண்டார்.

சொன்ன வெற்று வாக்குறுதிகளை பற்றி கேள்வி எழுப்பினால் நாங்கள் இந்தியர்களின் பிரதிநிதியல்ல. மலேசியர்களின் பிரதிநியென சப்பக்கட்டு கட்டும் வாய்சவுடால் மன்னர்களே முதலில் உண்மையை உணர்க. எதுவாவினும் தேசிய முன்னணியின் காலத்தில் கிடைக்க பெற்ற சலுகைகள் யாவும் இன்று ஒருக்கப்படுவதை இந்தியர்கள் நன்கு உணரத் தொடங்கி விட்டனர். எத்துனை காலத்திற்குத்தான் ஏமாற்ற முடியும்? ஏனெனில் உண்மை வெட்ட வெளிச்சமாகும் காலம் வெகுதூரமல்ல. நான் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கூறிட அந்நான்கு அமைச்சர்களில் ஒருவராவது செமினியில் என்னோடு பொது வாதத்திற்கு வர தயாரா என சுபாஷ் சந்திரபோஸ் சவால் விட்டுத்துள்ளார்.

Comments