சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு ஏற்பாட்டில் பொங்கல் விழா! சிலாங்கூர் சுகாதார துறை இயக்குநர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் சிறப்பு வருகை தலைவர் ரவி அழைப்பு

சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு ஏற்பாட்டில் பொங்கல் விழா!
சிலாங்கூர் சுகாதார துறை இயக்குநர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் சிறப்பு வருகை
தலைவர் ரவி அழைப்பு

சுங்கை பூலோ, பிப்.10-
        சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு ஏற்பாட்டில் பொங்கல் விழா சுங்கை பூலோ மருத்துவமனையில் நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் சுங்கை  ரவி கூறினார்.

சிலாங்கூர் சுகாதார துறை இயக்குநர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியும் இந்த பொங்கல் விழா சுங்கை பூலோ மருத்துவமனை  துறை  தலைவர்களுக்கான கூரை மூடப்பட்ட  கார் நிறுத்த வளாகத்தில் பிப்ரவரி 13 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெறவிருப்பதாக தேசம் வலைத்தளத்திடம் ரவி தெரிவித்தார்.

இந்த பொங்கல் விழா நிகழ்வுக்கு சுங்கை பூலோ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹாஜி கமாருடின், மைநாடி இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயேந்திரன் ஆகிய இருவர் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர். ஆகையால், இந்த பொங்கல் விழா நிகழ்வுக்கு சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி ரவி கேட்டுக் கொண்டார்.

Comments