பத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் தீ யோகி ராம்பாவ் அக்னி பிரவேசம்! ஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும் தலைவர் யுவராஜன் வேண்டுகோள்

பத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் தீ யோகி ராம்பாவ் அக்னி பிரவேசம்!
ஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும்
தலைவர் யுவராஜன் வேண்டுகோள்

குணாளன் மணியம்

பத்துமலை, பிப்.17-
     ஆலயங்கள் உலக அமைதிக்கும் மலேசிய மக்கள் சுபீட்சத்திற்கும் மகாயாகம் நடத்த வேண்டும் என்று பத்துகேவ்ஸ் ஐயப்பன் சுவாமி தேவஸ்தான
தலைவர் யுவராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த மகாயாகம் நடத்துவது வீண் செயல் என்று யாரும் கருதக்கூடாது. நமது முன்னோர்கள் காரணமின்றி இதனை வகுத்திருக்க மாட்டார்கள். 

ADVERTISEMENT ADVERTISEMENT

ஆலயத்தில் நடத்தப்படும் இந்த மகாயாக வழிபாடு மக்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடும். யாகத்தில் சேர்க்கப்படும்  மூலிகைப் பொருட்கள் புகைமண்டலமாக பரவும் போது யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அருமருந்தாகும் என்று  பத்துகேவ்ஸ் ஐயப்பன் ஆலயத்தில் தீ யோகி சுவாமி  ராம்பாவ் அக்னி பிரவேசம் மேற்கொண்ட நிகழ்வில் தேசம் வலைத்தளத்திடம் யுவராஜன் அவ்வாறு தெரிவித்தார்.இந்த மகாயாகத்தில் சுவாமி ராம்பாவ் சில மணிநேரம் அக்னியில் பிரவேசம் செய்தார். அக்னியில் படுத்த சுவாமி ராம்பாவின் செயலை கண்டு அங்கு இருந்த பக்தர்கள் பிரமித்து போயினர். அதன் பிறகு ராம்பாவ் சுவாமிகள் யாக பூசை நடத்தி, ஐயப்பன் ஆலயத்தில். படி பூசை நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இந்த மகாயாகம் மக்களுக்கு நன்மையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஐயப்பன் ஆலயத்தில் நடத்துவதாகவும் இதன் நன்மக பலருக்கு நேரடியாகச் சென்று சேரும் என்றும் தீயில் படுத்து யாகம் செய்வதை என் அன்னையின் மடியில்ல படுப்பதற்கு சம்மாக கருதுவதாகவும் சுவாமி ராம்பாவ் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.


இந்த மகாயாகத்தில் பத்துமலை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமீர்  3 ஆயிரம் பக்தர்கள் காலை தொடங்கி மாலை வரையில் வந்த வண்ணம் இருந்ததாகவும் இந்த மகாயாகம் வெற்றி பெற உதவிய ஏற்பாட்டுக் குழு, ஆலய நிர்வாகம், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பத்துகேவ்ஸ் ஐயப்பன் ஆலய தலைவர் யுவராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments