மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டப்படும் என்ற நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி காற்றில் பறந்ததா? டத்தோ ஞானசேகரன் கேள்வி

மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டப்படும் என்ற நம்பிக்கை கூட்டணி  வாக்குறுதி காற்றில் பறந்ததா? 
டத்தோ ஞானசேகரன் கேள்வி

மு.வ.கலைமணி


ஜோர்ஜ்டவுன் பிப் 4-
      மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டப்படும் என்ற நம்பிக்கை கூட்டணி  வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா என்று பினாங்கு மாநில ம.இ.கா தலைவர்
டத்தோ எம்.ஞானசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நம்பிக்கை கூட்டணி  பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கும் என்று
வாக்குறுதி வழங்கியிருந்தது. இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ள நம்பிக்கை கூட்டணி
அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி ஏன் அமைக்கவில்லை என்று டத்தோ எம்.ஞானசேகரன் கேட்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைக்க தேசிய முன்னனி அனுமதி வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் அவர்கள் கையில் இருப்பதால் தாராளமாக தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்கலாமே. தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அப்போதே கூறப்பட்டதால்  உடனடியாக தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் ஞானசேகரன் கேட்டுக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு பினாங்கு மாநில முதல்வராக இருந்த லிம் குவான் எங், மாநில அரசு தமிழ் இடை நிலைப் பள்ளியை கட்டுவதற்கு ஆவலாக இருப்பதாகவும் அதற்கான இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றலாமே என்றார் டத்தோ ஞானசேகரன்.

தற்போது லிம் குவான் எங் நிதி அமைச்சராக இருக்கும் நிலையில் தமிழ் இடைநிலைப்பள்ளியை தாராளமாக கட்டலாம் என்று டத்தோ எம்.ஞானசேகரன் குறிப்பிட்டார்.

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையும் என்று காத்திருக்கும் இந்திய சமுதாய மக்களின் நம்பிக்கையை  நம்பிக்கை கூட்டணி  அரசாங்கம் சிதைக்கக் கூடாது என்று டத்தோ எம். ஞானசேகரன் வலியுறுத்தினார்.

Comments