வாட்ஸ்ஆப் நேயர்களின் வசைபாட்டுக்கு ஆளான சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி!

வாட்ஸ்ஆப் நேயர்களின் வசைபாட்டுக்கு ஆளான சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.8-
         சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி வாட்ஸ்ஆப் நேயர்களின் வசைபாட்டுக்கு ஆளாகியுள்ளது புலனங்களில்  வைரலாகி வரும் செய்தியின் வழி தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் குறிப்பாக 3 லட்சம் இந்தியர்களின் அடையாள அட்டை பிரச்சினைக்கு ஆட்சியைப் பிடித்தவுடன் தீர்வு காணப்படும் என்று திருமதி காமாட்சி கூறியதாக அந்த புலன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாட்ஸ்ஆப் புலனத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த செய்தி இதுதான்:-

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
வாயாலே வடை சுடும் Whatsapp ஹீரோயின் YB காமாட்சி கவனத்துக்கு…

இதுதான் தேர்தலுக்கு முன் நீங்கள் பேசிய பொய்!  ஞாபகம் இருக்கிறதா ???

தேர்தலுக்கு முன் என்ன பேசினீர்கள்? என்ன வாக்குறுதி கொடுத்தீர்கள்? மறந்து விட்டீர்களா?

சிவப்பு அடையாள அட்டை விவகாரத்துக்கு வருவோம்.

300,000 இந்தியர்கள் இன்றுவரை சிவப்பு நிற அடையாள அட்டைதான் வைத்திருக்கிறார்கள். பாரிசான் அரசாங்கம் இந்தியர்களுக்கு துரோகம் செய்து விட்டது. எங்களுக்கு ஓட்டு போடுங்கள். பக்காத்தான் அரசாங்கம் வெறும் 100 நாட்களிலே அந்த 300,000 பேருக்கும் நீல நிற அடையாள அட்டையை கொடுத்து இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று வாய் நிறைய பொய்யை சொன்னது யார்? நீங்கள்தானே? உங்கள் பக்காத்தான் கட்சி இந்திய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தலைவலிகள் தானே?

தேர்தலுக்கு முன் பொய் மேல் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய போது உங்களுக்கு வாய் கூசவில்லையா? இருக்காது... கண்டிப்பாக கூச்சமாக இருக்காது. காரணம் உங்களுக்கெல்லாம் இதுதான் பொழப்பு.

தேர்தலில் ஜெயித்த கொஞ்ச நாட்களிலே கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஏற்கனவே ம.இ.கா சேகரித்து வைத்திருந்த 3,000 அடையாள அட்டை பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டு முதல் கட்டமாக 3,000 பேருக்கு நீல நிற அடையாள அட்டைகள் கொடுக்க போகிறோம் என்றீர்கள். என்னமோ அந்த 3,000 பேரையும் நீங்களும் உங்கள் பாக்காதான் ஆட்களும் கால் கடுக்க வீடு வீடாக அலைந்து கண்டு பிடித்த மாதிரி. அதெல்லாம் ம.இ.கா தேடி வைத்திருந்த தரவுகள் மற்றும் விவரங்கள். சரி, அந்த வேலையையாவது ஒழுங்காக செய்தீர்களா என்றால் அதுவும் பூஜியம்தான். ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. எத்தனை பேருக்கு நீல நிற அடையாள அட்டைகள் கொடுத்து விட்டீர்கள்? தைரியமிருந்தால் சொல்ல முடியுமா?

நீங்கள் எல்லாம் எதற்குதான் பதவிக்கு வருகிறீர்கள்? சட்டமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி எல்லாம் உங்களுக்கு ஒரு கேடு! கையாலாகாத நீங்கள் இனிமேலும் முந்தைய அரசாங்கத்தையும் ம.இ.காவையும் சொரிஞ்சிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு உங்கள் வேலையை பாருங்கள். சொன்னது சொன்னபடி நடந்துக் கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் வேற வேலையை போய் பாருங்க. உபத்திரமாக இருக்காதீங்க!

மீண்டும் வருவேன்.
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

வாட்ஸ்ஆப் புலனத்தில் மாண்புமிகு காமாட்சி குறித்து வெளிவந்த பதிவேற்றம் இதுதான்....

Comments

Post a Comment