இயக்குநர் விக்னேஷ் பிரபுவின் பெரும் முயற்சி மலேசிய திரைப்பட வரலாற்றில் மாறுபட்ட படைப்பு "பரமபதம்"

இயக்குநர் விக்னேஷ் பிரபுவின் பெரும் முயற்சி
மலேசிய திரைப்பட வரலாற்றில் மாறுபட்ட படைப்பு "பரமபதம்" 

குணாளன் மணியம்

மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட படைப்பாக வளர்ந்து வருகிறது "பரமபதம்"

மலேசிய கலைத்துறையில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கதையில் கவனம் செலுத்த தவறி விடுவதை பிறகு உணர்வார்கள். இந்நிலையில் கதைக்கு முக்கியத்துவம் வழங்கி   "பரமபதம்" திரைப்படத்தை பெரும் முயற்சியில் உருவாக்கி வருகிறார் நாட்டின் இளம் இயக்குநர் விக்னேஷ் பிரபு.விக்னேஷ் பிரபுவின் தந்தை இரா.இலட்சப்பிரபு ஒரு எழுத்தாளர், தமிழ் பேராசிரியர். தன் தந்தையைப் போலவே நன்கு தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரிந்த மகன் விக்னேஷ் பிரபு. தமிழ் தெரியாமல் திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு மத்தியில் தமிழ் இலக்கியம் வரை தெரிந்த தங்கமகனாக "பரமபதம்" திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் விக்னேஷ் பிரபு.


மலேசியக் கலைத்துறையில் குறும்படங்கள் தயாரித்து, விருது பெற்று முத்திரை பதித்த விக்னேஷ் பிரபு அதிகமான குறுப்படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார். சின்ன வயதில் கால்பந்து, ஹாக்கி, தைக்குவாண்டோ ஆகிய  விளையாட்டுகளில் விக்னேஷ் மிகவும் ஆர்வமாக இருந்ததால் இவர் உடல் வாகு ஒரு கதாநாயகன் போல் இருந்ததால் மேடை நாடகத்துறை இவரை ஈர்த்தது.


இந்நிலையில் பல தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தொடங்கி உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்திலும் பல நாடகங்களில் நடித்த அனுபவத்திலும் கடந்த 2015இல் சாய் நந்தினி மூவி வேல்ட் புரோடாக்‌ஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி "மித்ரன்" குறும்படத்தை இயக்கினேன். இந்த குறும்படத்திற்கு மலேசிய தமிழன் விருது விழாவில் எனக்கு சிறந்த  இயக்குநர் விருதும், சிறந்த நடிகர்  விருது எனது தம்பி தனேஷ் பிரபுவுக்கும் கிடைத்தது. அதன் பிறகு "துர்ஷ்டனை கண்டால்", " நீ அழகன்டா, "செல்பி", "விழிகளில் பதியும்", "நிழல்" ஆகிய குறும்படங்களை புதிய கலைஞர்கள், இயக்குநர்களைக் கொண்டு தயாரித்து போட்டிகளுக்கு அனுப்பினோம். இதனால் மலேசியா மற்றும் அனைத்துலக அளவில் விருதுகள் கிடைத்தது.
இதில் 2015இல் மலேசிய திரைப்பட விழாவில்  "செல்பிக்கு" விருது கிடைத்தது. 2017இல் சினிமா துளிகள் விருது விழாவில் "சாதுரியன்" குறும்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த
 இயக்குநர் விருது கிடைத்தது. இது "பரமபதம்" திரைப்படத்தை தயாரிக்க உதவியது. "ஜுமாஞ்ஜி" கேம் போர்ட் படம் எங்களை கவர்ந்த படம். இந்நிலையில் என் தந்தை சென்னையில் இருந்து "பரமபதம்" புத்தகத்தை வாங்கி வந்தார். அதில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் காலத்தில்  உருவாக்கப்பட்ட ஒரு கேம் போர்ட் "பரமபதம்" என்பதை தெரிந்து கொண்டோம். இந்த "பரமபதம்" குறித்து நானும் என் தந்தையும் தமிழ்நாட்டுக்கு சென்று ஆய்வு செய்தோம். கரி என்றால் பாம்பு என்று அர்த்தம். காலன் என்றால் மரணமில்லாதது என்று அர்த்தம். இதன் காரணமாகதான் இந்த கேம்போர்ட்டில் பாம்பும் ஏணியும் உள்ளது. இது ஆதியும் அந்தமும் போல முடிவில்லாத ஒன்று எனலாம். இது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்ததால் திரைப்படமாக உருவாக்கி வருகிறோம். இந்த "பரமபதம்" திரைப்படம் கேம் போர்ட் விளையாடிய நான்கு இளைஞர்கள் தொடர்பான ஒரு கதையாகும். இந்த திரைப்படத்தில் கே.எஸ்.மணியம், பென்ஜி, அமிகோஸ் சுகு, விக்கி நடராஜா, கவிமாறன், அகோதரன்,  சிங்கப்பூர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த "பரமபதம்" திரைப்படத்தை சாய் நந்தினி மூவி வேல்ட் நிறுவனத்தின் சார்பில் முனைவர் லட்சப்பிரபு, முனைவர் சக்கரவர்த்தி இருவரும் தயாரித்துள்ளனர்.
இதில் 35 கலைஞர்கள் நடித்துள்ளனர். இதன் இயக்குநராக நான் பணியாற்றியிருக்கிறேன். தம்பி தனேஷ் பிரபு இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பரமபதத்தில் நான் நடித்தும் இருக்கிறேன் என்றார் விக்னேஷ்வரன்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்த படம் குறித்து விக்னேஷ் பிரபுவின் தந்தையிடமும் கேட்டோம்.
100 மணி போராட்டத்தின் இரகசியம் "பரமபதம்".
பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்றான பரமபத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் மலேசிய தமிழ்த் திரைப்படம் 'பரமபதம்'. இளம் சகோதர இயக்குநர்கள் விக்னேஷ் பிரபு - தனேஷ் பிரபு ஆகிய இருவரும் இப்படத்தை இயக்குகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். திகில், பரபரப்பு, மர்மம், பிரள்வு என பல கோணங்களில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
பரமபதத்துடன் 100 மணி நேரம் போராடும் கதையே 'பரமபதம்'. அதாவது 4 நாள் 4 மணிநேரத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களை ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம்
திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்தி முடித்து, இவ்வாண்டு ஜூன் மாதத்தில்  இத்திரைப்படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வரும் பெரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று இதன் தயாரிப்பாளருமான முனைவர். இரா. இலட்சப்பிரபு PhD தெரிவித்தார்.கலைத்துறையில் பல அனுபவங்களைக் கொண்டு திரைப்பட தயாரிப்பில் விக்னேஷ்வரன். இவருக்கு தந்தை லட்சப்பிரபு, தம்பி தனேஷ் பிரபு, "பரமபதம்" குழுவினர் ஊன்றுகோளாக இருந்து வருகின்றனர். தற்போது வேகமாக வளர்ந்து வரும் இந்த "பரமபதம்" திரைப்படம் ஒரு மாறுபட்ட படைப்பாக ஜூன் மாதம் திரையேறவிருக்கிறது.""பரம்பதம்" வெற்றிநடை போட தேசம் வாழ்த்துகிறது.

Comments

Post a Comment