வளர்ந்து வந்த பாதையை மறக்காமல் கூலித் தொழிலாளியின் மகளை மருமகளாக்கிய வடிவேலு

வளர்ந்து வந்த பாதையை மறக்காமல் கூலித் தொழிலாளியின் மகளை மருமகளாக்கிய
வடிவேலு

தேசம் சென்னை செய்தியாளர் வெங்கடேஷ்

சென்னை, பிப்.12-
       தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்  நகைச்சுவை நடிகர் வடிவேலு. அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட  சில பிரச்சினைகளால்  சினிமாவில் இருந்து ஓரங்கட்டபட்டாலும் இன்றும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார் வடிவேலு.

ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகன் சுப்ரமணி  திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இல்லாமல் நடந்தது.

சினிமாக்காரர்கள் ஒருவர் கூட கண்ணுக்குத் தென்படவில்லை. உறவினர்கள் மட்டுமே காணப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர்தான் மணப்பெண்.

ADVERTISEMENT



 ADVERTISEMENT

இப்பெண்ணின் தந்தை வேல்முருகன் பந்தல் வேலை பார்க்கும் சாதாரண கூலித்தொழிலாளி. இவர்கள் கூரை வீட்டில் வசிக்கும் ஏழை குடும்பம். தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காத வடிவேலு, தன் மகனுக்கு ஏழ்மையான பெண்ணை தேடியுள்ளார்.

பெண் கூரை வீட்டில் வசிக்க வேண்டும் என்பது வடிவேலுவின் கட்டாய விதிமுறை. திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தாம் ஏற்பதாகவும், பெண்ணை மட்டும் அனுப்பி வைக்குமாறும் வடிவேலு கூறியுள்ளார். வசதி வந்தபின், கடந்த காலத்தை மறப்பவர்களுக்கு மத்தியில் வடிவேலு உயர்ந்து நிற்கிறார்.  வடிவேலுவின் இந்த செயல் மற்ற சினிமாகாரர்களுக்கு  சிறந்த பாடம்.

Comments