பினாங்கில் இந்திய பிச்சைக்காரர்கள் உருவானது எப்படி? இந்திய அரசியல் தலைவர்கள், இந்திய அரசு சாரா இயக்கங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பினாங்கில் இந்திய பிச்சைக்காரர்கள்  உருவானது எப்படி?
இந்திய அரசியல் தலைவர்கள், இந்திய அரசு சாரா இயக்கங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மு.வ.கலைமணி

பினாங்கு, பிப்.15-
    பிச்சைக்காரர்களின் பெருக்கம் பினாங்கு மாநிலத்தில் ஏற்றம் கண்டுள்ளது குறித்து தமிழர்கள் புலனங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மாநில ரீதியில் இதுவரையில் இத்தகைய ஒரு பிரச்சனை இதற்கு முன்பு பெரிய அளவில் எழவில்லை என்கிறபோது, இப்போது நடந்து வரும்  இப்பிரச்சனை பல புலனங்களில் பகிரப்பட்டு வருகின்றதோடு இந்த அவல நிலைக்கு யார் காரணம் என்றும், பொருளாதார பிரச்சனையில் இந்தியர்கள்  சிக்குண்டு இருப்பதே என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT ADVERTISEMENT

இங்குள்ள பாயான் லெபாஸ் செல்லும் வழியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் ஸ்நேக் டெம்பல் (பாம்புக் கோயில்) முன்வாசலில்  பிச்சைக்காரர்களின் படையெடுப்பினால், வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுமார் 25க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் தங்கள் கைக் குழந்தைகளுடன் இவ்விடத்தில் தினமும் பிச்சையெடுத்து வருவது ஒரு கேவலமான செயலாகப் படுவதாக புலனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அரசியல்வாதிகளும் என்.ஜி.ஓகளும் இது தொடர்பாக ஏன் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்க வில்லையென அப்புலனங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இத்தகைய பிச்சை எடுக்கும் தமிழர்களுக்கு உதவ அறவாரியம் முன்வரலாமே என்று பல புலனங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது.

Comments