உதயா மீது எடுக்கப்படும் நடவடிக்கை தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் சூரியகுமார் முருகன் எச்சரிக்கை

உதயா மீது எடுக்கப்படும் நடவடிக்கை தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்
மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் சூரியகுமார் முருகன் எச்சரிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.2-
தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசிய உதயா மீது எடுக்கப்படும்  நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் துணைச் சூரியகுமார் முருகன் கூறியுள்ளார்.

தமிழ்ப்பத்திரிகைகள் என்றால்  பலருக்கு கிள்ளு கீரையாகி விட்டது. தமிழ்ப்பத்திரிகைகளை என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது சிலரது நினைப்பு. உதயா மீது எடுக்கப்படும் நடவடிக்கை  தமிழ்ப்பத்திரிகைகளை கேவலப்படுத்தி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால் டிஎச்ஆர் ராகா நிர்வாகம் உதயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஓசை பத்திரிகையின் நிருபருமான சூரியகுமார் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் அலுவலகம் வந்த உதயா அதற்கு வருத்தப்பட்டதாக தெரியவில்லை. ஒரு அறிவிப்பாளர் போலவே அவரது நடவடிக்கை இருந்தது. ஒப்புக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்றார் சூரியகுமார்.

தமிழ்ப்பத்திரிகைகளை படுமோசமாக விமர்ச்சித்த உதயா மீது நடவடிக்கை தேவை. இந்த விவகாரம் தொடர்பில் டிஎச்ஆர் ராகா  நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரியகுமார் முருகன் கேட்டுக் கொண்டார்.

Comments