சிம்பாங் அம்பாட்டில் தமிழ் கல்வி வகுப்பு தொடக்கப்பட்டது ஒரு வரலாற்றுப் பதிவு!

சிம்பாங் அம்பாட்டில் தமிழ் கல்வி வகுப்பு தொடக்கப்பட்டது ஒரு வரலாற்றுப் பதிவு!

மு.வ.கலைமணி

பினாங்கு, பிப்.15.
       வருங்கால தலைமுறைகள் தாய் மொழி தமிழை மறந்து விடக்கூடாது,
உயிர் மூச்சாக தாய் மொழியை காத்திட வேண்டும், அடுத்து வரும் நம் இளவயதினர் இதனை  ஒரு லட்சியமாக கொண்டு மொழிக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்ற ஒரு கொள்கையில் தொடங்கப்பட்டதே இந்த வகுப்பு என ஏற்பாட்டுக் குழு தலைவர் விஷ்ணு வரதன் கூறினார்.

சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான மண்டபத்தில் அதிகாரபூர்வமாக திறப்பு கண்ட இக்கல்வி வகுப்பில் முதல்கட்டமாக சுமார் 20 மாணவர்கள் பயிற்சியை தொடங்கினர்.

பட்டதாரி ஆசிரியையான பிரேமா  இக்கல்வி வகுப்பில் தமிழ் மொழியை கற்பிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளார்.  அவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான நிர்வாகக் குழுவினர்களும் ஏற்பாட்டுக் குழுவினர்களும் குரு தட்சணை வழங்கி வகுப்பை தொடக்கி வைத்தனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் அதிகமான ஆரம்ப பள்ளி மாணவர்களை சேர்க்க விருப்பதாகவும், அதனை தொடர்ந்து இடைநிலைப் பள்ளி மாணவர்களையும் சேர்ந்து பெரிய அளவில் இவ்வகுப்பை விரிவடைய செய்ய தம் குழுவினர் முயற்சித்து வருவதாக விஷ்ணு வரதன் சொன்னார்.

இவ்வகுப்பு ஆரம்பிக்க பேருதவிகள் வழங்கிய கலைமுகிலன், முகுந்தன் மற்றும் தேவஸ்தான இளைஞர் பகுதியினருக்கும், மண்டபத்தை இலவசமாக கட்டணமின்றி தந்துதவி வரும் தேவஸ்தான நிர்வாகத்திற்கும் தாம் நன்றி கூற கடமைப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முதியோர் தமிழ் கல்வி வகுப்பினையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாகவும்  அவர் சொன்னார்.

Comments