தேசிய முன்னனி அரசாங்கம் புந்தோங் கம்போங் செக்கடி இந்திய மக்களுக்கு வழங்கிய நிலத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஏன் வழங்க மறுக்கிறது? ம.இ.கா கம்போங் செக்கடி கிளைத் தலைவர் பெ. பாலையா கேள்வி

தேசிய முன்னனி அரசாங்கம் புந்தோங் கம்போங் செக்கடி 
இந்திய மக்களுக்கு வழங்கிய நிலத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஏன் வழங்க மறுக்கிறது?
ம.இ.கா கம்போங் செக்கடி கிளைத் தலைவர்
பெ. பாலையா கேள்வி

குணாளன் மணியம்

ஈப்போ, பிப்.9-
       புந்தோங் கம்போங் செக்கடியில் குடியிருந்த 474 இந்திய குடும்பங்களில் 210 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டு மக்கள் வீடுகளும் கட்டிக் கொண்டார்கள்.

இந்நிலையில் மீதமுள்ள 264 குடும்பங்களுக்கு முந்தைய தேசிய   முன்னனி  அரசாங்கம் வழங்கிய நிலத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஏன் வழங்க மறுக்கிறது என்று ம.இ.கா கம்போங் செக்கடி கிளைத் தலைவர்
பெ. பாலையா கேள்வி எழுப்பியுள்ளார்.ADVERTISEMENT


 ADVERTISEMENT

புந்தோங் வட்டாரத்தில் மொத்தம் 686 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 474 குடும்பங்கள் கம்போங் செக்கடியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் முதல் கட்டமாக 210 பேருக்கு நிலம் வழங்கப்பட்டு விட்டது. இதில் தேசிய முன்னனி அரசாங்க ஆட்சியின் போது மீதமுள்ள 264 பேருக்கு   பத்து காஜா வட்டாரத்தில் பெம்பான் பகுதியில் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் நில அலுவலகம் கம்போங் செக்கடியைச் சேர்ந்த 264 பேருக்கு பெம்பான் பகுதியில் நிலம் வழங்குதாக உறுதி கடிதங்கள் வழங்கி அதற்கான பாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 136 பேர் பதிவுத் தொகையான 30 வெள்ளியை செலுத்தி விட்டனர். இந்நிலையில் புத்தோங் கம்போங் செக்கடி இந்திய மக்களுக்கு அடுக்குமாடி வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்பிரமணியம் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெம்பான் நிலப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ம.இ.காவின்  பரிந்துரையின் பெயரில் நிலத்தை சீரமைப்பு செய்து லோட்டுகளாக பிரிக்க முன்னாள் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்  5 மில்லியன் மானியம் ஒதுக்கீடு செய்திருந்தார். இந்த தொகை பேரா மாநில அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு விட்டது. இதற்காக அன்றைய பேரா மாநில தலைவர்களான டான்ஸ்ரீ டத்தோ ஜி. இராஜூ, டான் ஸ்ரீ டத்தோ சு. வீரசிங்கம் மற்றும் தற்போதைய மாநில தலைவர் டத்தோ வ. இளங்கோ ஆகியோர் பெரும் முயற்சி எடுத்திருந்தனர்.

அந்த 145 ஏக்கர் நிலத்தில் 135 பேருக்கு நிலங்கள் கையடக்கப்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் சாலைகள் போடப்பட்டு எல்லாம் சீரமைக்கப்பட்டு விட்டன. மக்கள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்த இடத்திற்கு பேருந்தில் அழைத்துச் செல்லபட்டு நிலத்தை பார்த்தும் விட்டனர்.

இந்நிலையில்  மற்றவர்களுக்கான நிலங்கள் தொடர்ந்து கையடக்கப்படுத்தப்படும் வேளையில் இப்போது புதிதாக பிரச்சினை எழுந்துள்ளது. 264 இந்திய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அந்த நிலத்தை அபகரித்துக் கொண்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கம், புந்தோங் கம்போங் செக்கடி இந்தியா மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும் என்று தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் இன்று 09.02.2019 புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்  ஆதி். சிவசுப்பிரமணியம்  அறிக்கை வெளியிட்டுள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாலையா சொன்னார்.

பெம்பான் நில மேம்பாட்டு திட்ட வேலைகள் முடிவடைத்துள்ள வேளையில், இப்போது  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் புத்தோங் வட்டாரத்தில்  அடுக்குமாடி வீடுகள் வழங்க இன்றைய பாக்காத்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளாதக ஆதி.சுப்பிரமணியம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கைக்கு வரும் நிலத்தை தர மறுப்பது ஏன்?

பெம்பான் பகுதியல் நிலம் வழங்க இயலாது என்றும் அதற்கு பதிலாக அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்படும் என்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கூறுவது ஏற்ப்புடையதல்ல. "தவிர்க்க முடியாத காரணத்தால்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்ன தவிர்க்க முடியாத காரணம் என்று அவர் விளக்க வேண்டும்.

இந்திய குடும்பங்கள் 264 பேருக்கு கிடைக்கவிருந்த அந்த நிலத்தை தட்டிப் பறித்த நம்பிக்கை கூட்டணி அரசுக்கு ஆதி.சிவசுப்பிரமணியம் துணை போவது ஏன்? இந்தியர்களை வஞ்சிக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனீர்களா? இந்தியர் நலனை காக்க வேண்டிய நீங்கள் இப்படி செய்வது நியாயமா என்று பாலையா வினவினார்.

எந்த காரணத்தை கொண்டும் தமது தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். நிலத்தை வழங்காமல் அடுக்குமாடி வீடுகள் வழங்கும் திட்டத்தை அவர் கைவிடவேண்டும். புந்தோங் கம்போங் செக்கடி மக்களுக்காக நாங்கள் போராடுவோம் என்று பாலையா குறிப்பிட்டார்.

Comments