"அமைச்சராக இருக்கும் நான் இந்திரா காந்தி வழக்கில் தலையிட முடியாது"! எம்.குலசேகரன் அறிவிப்பு

"அமைச்சராக இருக்கும் நான் இந்திரா காந்தி வழக்கில் தலையிட முடியாது"!
எம்.குலசேகரன் அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.13- 
       அமைச்சராக இருப்பதால் இந்திரா காந்தி வழக்கில் இனியும் தலையிட முடியாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

"இந்திரா காந்தி விவகாரத்தில் தலையிட வேண்டாம்; உங்கள் வேலையைப் பாருங்கள்"  என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இந்திரா காந்தி வழக்கில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டுள்ளதாக ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் குலசேகரன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

"எனினும் இந்திரா காந்தி வழக்கை எடுத்து நடத்த உதவுமாறு வேறு வழக்கறிஞரிடம் கேட்டிருக்கிறேன். நான் பின்னால் இருந்து இந்திரா காந்திக்கு உதவி செய்வேன்" என்றார் குலசேகரன்.

" இந்திரா காந்தி வழக்கில் இருந்து நான் முழுமையாக விலகிக் கொண்டுள்ளேன். நான் ஆஜராகி இருந்தால் இன்னும் நிறைய செய்திருப்பேன். நான் அவரது வழக்கை நடத்தவில்லை என்பதால் என்னை விலகி நிற்கச் சொல்லி விட்டார்கள்" என்று குலசேகரன் சொன்னார்.

கடந்த 11.3.2009இல்  இந்திரா காந்தியின் கணவர் பத்மநாபன் முகமட் ரிட்சுவான் என்று ஒரு முஸ்லிமாக மதம் மாறியதோடு தனது மூன்று பிள்ளைகளையும் மதம் மாற்றி கடைசி பிள்ளையான பிரசன்னா டிக்‌ஷாவை தூக்கிச் சென்றுள்ளார். பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ஷாரியா நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். இந்த வழக்கை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் எடுத்து நடத்தினார்.

இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றம் தாயார் இந்திரா காந்தியின் அனுமதியில்லாமல் செய்யப்பட்ட மதமாற்றம் செல்லாது என்று அதனை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் முகமட் ரிட்சுவானை கைது செய்து இந்திராவின் மகள் பிரசன்னாவை மீட்கும்படி உத்தரவிடப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments