சுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது! -இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி

சுங்கை பூலோ மருத்துவமனையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது!
-இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி

குணாளன் மணியம்

சுங்கை பூலோ, பிப்.13-
        சுங்கை பூலோ மருத்துவமனையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் விழா மூவின மக்களகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக  இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி
 கூறினார்.பொங்கல் விழா இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக இருந்தாலும்கூட சுங்கை பூலோ மருத்துவமனையில் இந்தியர், மலாய், சீனர் என்று மூவின மக்களுடன் கொண்டாடப்படுவதாகவும் இது சுங்கை பூலோ மருத்துவமனை மூவின பணியாளர்கள்  மத்தியில் உறவை வலுப்படுத்துவதாக தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் ரவி அவ்வாறு தெரிவித்தார்.

சுங்கை பூலோ மருத்துவமனையில் 5ஆவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு மருத்துவமனை இயக்குநர் ஹாஜி கமாருடின், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் பேராதரவு வழங்குகின்றனர் என்றார் ரவி.

இந்த கொண்டாட்டம் இந்திய பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் போது அனைவருக்கும் பால் பொங்குவது போல்  மகிழ்ச்சி பொங்குவதாக ரவி சொன்னார்.

சுங்கை பூலோ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கமாருடின் அவரது உரையில்  குறிப்பிட்டது போல் ஆண்டுதோறும் இந்த பொங்கல் விழா ஒற்றுமை திருநாளாக கொண்டாடப்படும் என்று தெரிவித்த ரவி, இவ்விழா வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

சுங்கை பூலோ மருத்துவமனை கார் நிறுத்த வளாகத்தில் பிப்ரவரி 13 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. சுங்கை பூலோ மருத்துவமனை இந்திய பணியாளர்கள் கிளப் கலாச்சார பிரிவு தலைவர் ரவி தலைமையில் இந்திய பணியாளர்கள் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தனர்.
 இதில் டாக்டர் கமாருடின், டாக்டர் ஷாரா, இந்திய மருத்துவர்கள், மலாய் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் பானையில் பால் ஊற்றி பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments