இளைஞர்கள் தீய வழிக்கு செல்வதைத் தவிர்க்க ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப்பின் கால்பந்து பயிற்சி, கால்பந்து போட்டி விளையாட்டு கிளப் தோற்றுநர் பி.விக்னேஷ்வரன் தகவல்

இளைஞர்கள் தீய வழிக்கு செல்வதைத் தவிர்க்க ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப்பின் கால்பந்து பயிற்சி, கால்பந்து போட்டி விளையாட்டு
கிளப் தோற்றுநர் பி.விக்னேஷ்வரன் தகவல்

ரவாங், பிப்.19-
      இளைஞர்கள் தீய வழிக்கு செல்வதைத் தவிர்க்கவும் இளைஞர்கள் மத்தியில் காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கவும் ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப் இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி, கால்பந்து போட்டி விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக
கிளப் தோற்றுநர் பி.விக்னேஷ்வரன் கூறினார்.

இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகள் மூலம் நல்வழிப்படுத்த முடியும். நாட்டில் படித்த இளைஞர்கள் நல்ல வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

ஆனால் கல்வியை கைவிட்ட இளைஞர்களின் நிலை என்ன? இத்தகைய இளைஞர்களுக்கு விளையாட்டுகள் வழிகாட்டும் என்பதால்
ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப் தொடங்கப்பட்டது.
இந்த கிளப் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி வழங்கி வருகிறோம்.
அதேநேரத்தில் கால்பந்து போட்டியும் நடத்தி வருவதாக விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்நிலையில் ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப் டெர்பி ரவாங் சோசியல் லீக்  2019 (VSR LARANYA FC IN DERBY SOCIAL LEAGUE 2019) கால்பந்து போட்டி விளையாட்டில் பங்கெடுத்துள்ளது. இந்த விளையாட்டுப் போட்டியில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இந்த ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப் டெர்பி ரவாங் சோசியல் லீக்  2019 கால்பந்து விளையாட்டுப் போட்டியின் அறிமுக விழா அண்மையில் ரவாங்கில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 16 குழுக்கள் கலந்து கொண்டன. இந்த லீக் விளையாட்டு 3 மாதங்கள் வரையில் நடைபெறும். செலாயாங் பாரு நகராண்மைக்கழக உறுப்பினர் திரு.சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கால்பந்து குழுவை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த இந்த ரவாங் விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப்பின் கால்பந்து விளையாட்டுக்கு திரு.சரவணன், ஏசான் ஜெயா உரிமையாளர் டத்தோ சுரேஷ் ராவ், சப்கா மாலிக் ஆத்மா திரு.சிவா, ஜே.எஸ். ஜெகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் திரு.ஜெகநாதன், எம்.பி.செல்வன் ஹேர் சலூன் உரிமையாளர் திரு.செல்வன், மலேசிய முன்னாள் கால்பந்து விளையாட்டாளர் கே.நந்தகுமார், நவநாயகம் டிரேடிங் உரிமையாளர் திரு.ரோபர்ட், லிவினா எண்டர்பிரைஸ் திரு.அல்போன்சோ, கன்கேன் வாட்டர் முகமட் ஜுல்கிப்ளி, சினி ஸ்னேப் கிரியேசன்ஸ் திரு.சுரேஷ் விஎஸ்எல் லாரண்யா எண்டர்பிரைஸ் திருமதி சிவரஞ்சனி ஆகியோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்த விஎஸ்எல் லாரண்யா எஃப்சி கிளப்பின் கால்பந்து பயிற்சி, கால்பந்து நடவடிக்கைகளுக்கு மலேசிய முன்னாள் விளையாட்டாளர் கே.நந்தகுமார் ஆதரவு வழங்கியுள்ளார். இந்த கிளப் மூலம் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு கே.நந்தகுமார் பயிற்சி வழங்கவிருக்கிறார்.
இந்த வேளையில் அவருக்கும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் விக்னேஷ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments