ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவி துர்க்கா குணசேகரன் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தில் ஏ பிளஸ் சிறப்புத் தேர்ச்சி

ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவி துர்க்கா குணசேகரன் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தில் ஏ பிளஸ் சிறப்புத் தேர்ச்சி

ரவாங், மார்ச் 15
      ரவாங் தமிழ்ப்பள்ளியில் படித்த ஸ்ரீ காரிங் இடைநிலைப்பள்ளி  மாணவி துர்க்கா குணசேகரன் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை படைத்துள்ளார்.

துர்க்கா தமிழ் மொழி, தமிழ் இலக்கிய பாடங்களில் ஏ பிளஸ் பெற்று சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் நன்னெறி, வரலாறு, கணிதம், பிசிக் ஆகிய பாடங்களிலும் ஏ பிளஸ் சிறப்பு தேர்ச்சி பெற்றார். மாற்ற பாடங்கள் அனைத்திலும் ஏ பெற்றுள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

ரவாங் தமிழ்ப்பள்ளியில் படித்த துர்க்கா யூபிஎஸ்ஆர் தேர்வில் 7ஏவும் பிஎம்ஆர் தேர்வில் 9ஏவும் பெற்றவராவார்.

துர்க்காவின் சாதனைக்கு பெற்றோர் லில்லி மேரி, தங்கை வைஷ்ணவி, பள்ளி ஆசிரியர்கள் பிரமிளா, பீட்டர், புவான் சஹாரா, ரஹிம் ஆகியோர் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். துர்க்காவின் தாயார் லில்லி மேரி சுகாதார அமைச்சில் தாதியர்களுக்கு பாடம் போதிக்கும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையார் குணசேகரன் தனியார் துறையில் நிர்வாகியாக உள்ளார். ரவாங் தமிழ்ப்பள்ளி பெற்றோ- ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

துர்க்கா மெட்ரிகுலேசன் படிக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு பல் மருத்துவம் படிக்க எண்ணம் கொண்டுள்ளதாக துர்க்கா தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

Comments