இந்திய சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த தெலுக் இந்தான் ஹார்லி மெத்தடிஸ் இடைநிலைப் பள்ளி மாணவர் முகிலரசன் 11ஏ பெற்று சாதனை தமிழ் மொழியில் சிறப்புத் தேர்ச்சி

இந்திய சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த தெலுக் இந்தான் ஹார்லி மெத்தடிஸ்  இடைநிலைப் பள்ளி மாணவர் முகிலரசன் 11ஏ+ பெற்று சாதனை
தமிழ் மொழியில் சிறப்புத் தேர்ச்சி

குணாளன் மணியம்

தெலுக் இந்தான், மார்ச் 15-
 இந்திய சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார் தெலுக் இந்தான் ஹார்லி மெத்தடிஸ் இடைநிலைப் பள்ளி மாணவர் முகிலரசன் மலையரசன். இவர் எஸ்பிஎம் தேர்வில் 11 ஏ பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளியில் இரண்டு இந்திய  மாணவர்கள் மட்டுமே 11ஏ பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு மாணவரான முகிலரசன் தேசிய மொழி, நன்னெறி, வரலாறு, தமிழ்மொழி, வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய 7 பாடங்களில் ள பிளஸ் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். மற்ற நான்கு பாடங்களில் ஏ பெற்று மொத்தம் 11 ஏ பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT


இந்த பள்ளியில் இரண்டு இந்திய மாணவர்கள் மட்டுமே 11 ஏ +
பெற்றுள்ளனர்.

 ஒரு சீன மாணவர் 11ஏ பெற்றுள்ளார். சிறந்த இந்திய மாணவரான முகிலரசன் யூபிஎஸ்ஆர் தேர்வில் 7ஏவும் பிடி3 தேர்வில் 8ஏவும் பெற்றிருந்தார்.  நான் தற்போதைக்கு மெட்ரிகுலேசன் படிக்கவிருக்கிறேன். அதன்பிறகு எந்த துறையில் மேல்படிப்பை தொடரலாம் என்பது குறித்து முடிவு செய்வேன். நான் 11 ஏ பெற்றதற்கு என் விடாமுயற்சிதான் காரணம். என் தாயார் திருமதி சுசிலா மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அதேநேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உதவி வழங்கினர்.  ஆசிரியர்கள், நண்பர்கள் பலரும் ஒத்துழைப்பு வழங்கினர். எட் தங்கை தமிழரசி பிடி3 தேர்வில் 7 ஏ பெற்று தற்போது படிவம் 4 படிந்து வருகிறார். இந்த வேளையில் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முகிலரசன் மலையரசன்.

Comments