சினி சத்ரியா பட நிறுவனம் "குற்றம் செய்யேல்" திரைப்படத்தின் வழி 110 மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது! 3 திரைப்படத்தின் வழி மொத்தம் 310 கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்

சினி சத்ரியா பட நிறுவனம்  "குற்றம் செய்யேல்"  திரைப்படத்தின் வழி 110 மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது!
3 திரைப்படத்தின் வழி  மொத்தம் 310 கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 7-
       சினி சத்ரியா படநிறுவனம் "குற்றம் செய்யேல்" திரைப்படத்தின் வழி க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.


இந்நிறுவனத்தின் சார்பில்  வெளிவந்துள்ள நான் கபாலி அல்ல திரைப்படத்தில் 70 அனைத்து துறை மலேசிய கலைஞர்களும், குற்றம் செய்யேல் திரைப்படத்தில் 110 அனைத்து துறை மலேசிய கலைஞர்களுக்கும் இவ்வாண்டு


ADVERTISEMENT


 ADVERTISEMENT

மத்தியில் வெளிவரவிருக்கும் தமனி  திரைப்படத்தின் வழி 130 அனைத்து துறை மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா இருவரும் தெரிவித்தனர்.


இந்நிலையில் இவ்வாண்டு மேலும் பல படங்கள் தயாரிப்பில் இருப்பதாகவும் இதன்வழி மேலும் குறைந்தபட்சம் 1,000 அனைத்து துறை மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் டாக்டர் செல்வா சொன்னார்.


மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சினி சத்ரியாவின் இலக்கு. ஆகையால், மலேசியர்கள் தங்கள் திரைப்படங்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் வழி பல ஆயிரம் மலேசியக் கலைஞர்கள் பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை பெறுவார்கள். ஆகையால்  மார்ச் 7 தொடங்கி  நாடு தழுவிய நிலையில் திரையேறவரும் "குற்றம் செய்யேல்" திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தரும்படி டாக்டர் செல்வா, பாரதிராஜா இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments