செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி அபார வெற்றி 19,780 வாக்குகள் பெற்றார் ஜக்காரியா

செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி அபார வெற்றி 
 19,780 வாக்குகள் பெற்றார் ஜக்காரியா

குணாளன் மணியம்

செமினி, மார்ச் 2-   
         செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி அபார வெற்றி பெற்றுள்ளது.
தேசிய முன்னனி வேட்பாளர் ஜக்காரியா ஹனாப்பி 16,371 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முகமட் ஐமான் 17,866 வாக்குகள் பெற்றார். தேசிய முன்னனி வேட்பாளர் 1,914 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். இதன்வழி நம்பிக்கை கூட்டணி அடைந்துள்ள சரிவை காண முடிவதாக மக்கள் கருத்துரைத்துள்ளனர்.கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு வழங்கிய வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதுதான் செமினி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என்று அவர்கள்  தெரிவித்தனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் அதனை நிறைவேற்றத்தவறி விட்டது குறிப்பிடத்தக்கது.

Comments