பொன்னமராவதி காவலர் திலகம் விருது நாயகன்! டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு 2018 ஆண்டுக்கான டாக்டர் சன் யாட் சென் விருது! பினாங்கு கொங் வா ஜித் போ பத்திரிகை வழங்கியது பொன்னமராவதி மக்கள் பாராட்டு!

பொன்னமராவதி காவலர் திலகம் விருது நாயகன்!
டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு  2018 ஆண்டுக்கான டாக்டர் சன் யாட் சென் விருது!
பினாங்கு கொங் வா ஜித் போ பத்திரிகை  வழங்கியது 
பொன்னமராவதி மக்கள் பாராட்டு!

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

புதுக்கோட்டை மார்ச் 31-
பொன்னமராவதி காவலர் திலகம் விருது நாயகன் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு பினாங்கு கொங் வா ஜித் போ பத்திரிக்கை
2018ஆம் ஆண்டுக்கான டாக்டர் சன் யாட் சென் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பினாங்கு மாநில முன்னாள் காவல்துறைத் தலைவரான வெற்றித் தமிழர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகனுக்கு சரியான நேரத்தில் இந்த விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பினாங்கு மாநிலத்தை ஒரு அமைதிப் பூங்காவாக மிளிரச் செய்ததோடு மட்டுமன்றி எல்லா இன சமுதாயத்தினரோடும் அணுக்கமான உறவு கொண்டிருந்தவர் டத்தோஸ்ரீ தெய்வீகன். இதில் குறிப்பாக சீனர் சமுதாயத்திற்கும்,  காவல்துறைக்கும் ஓர் இணக்கமான உறவுப்பாலத்தை உருவாக்கி அளப்பரிய சேவை வழங்கியமைக்காக இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவலர் திலகம், வெற்றித் தமிழர், சரித்திர காவலர், இளைஞர்களின் நல்வழி நாயகன்  என்று நான்கு விருதுகள் வழங்கப்பட்டதை நினைவு கூறுவதில் பொன்னமராவதி மக்கள் பெருமைப்படுகின்றனர் .
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்பராம்,
இரா. பாஸ்கர் 🇮🇳 இந்தியன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எழுச்சி மன்றம் காமராஜ் நகர் பொன்னமராவதி்
சிதம்பரம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் திரு.பழ.சிதம்பரம், முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ மாணவிகள்,
பொன்னமராவதி லயன்ஸ் ஷைன் நிர்வாகிகள்,
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை நிர்வாகிகள், மற்றும் சரவணன், பாண்டியன், பிரபு, மற்றும்
பொன்னமராவதி பத்திரிக்கை நண்பர்கள், தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஆகியோர் சார்பில் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அவர்களுக்கு  மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள், பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments