எம்.ஜி.ஆர் விஜயசேகர் துணைவியார் திருமதி விஜயா விபத்தில் அகால மரணம் நாளை மார்ச் 21 இறுதிச் சடங்கு

எம்.ஜி.ஆர் விஜயசேகர்  துணைவியார் திருமதி விஜயா விபத்தில் அகால மரணம்
நாளை மார்ச் 21 இறுதிச் சடங்கு

கோலாலம்பூர், மார்ச் 20-
எம். ஜி. ஆர் விஜயசேகர்  துணைவியார் திருமதி விஜயா பாலன் (வயது 66) பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் விஜயசேகருடன் இன்று மார்ச் 20 புதன்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா  சென்றிருந்த திருமதி விஜயா கணவருக்காக காரில் காத்திருந்த நிலையில் இங்குள்ள ஜெயா பேரங்காடிக்கு அருகில் குளிர்பானம் வாங்க காரைவிட்டு இறங்கி சாலையைக் கடக்க முயன்ற போது கார் ஒன்றினால் மோதப்பட்டு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்ததாக அவரது மகனும் கலைஞருமான எம்.ஜி.ஆர் விஜய் ஆனந்த் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு மார்ச் 21 வியாழக்கிழமை No 25, Jalan SS 25/32, Taman Mayang, Petaling Jaya ஜெயா எனும் முகவரியிலுள்ள தங்கள் இல்லத்தில் பிற்பகல் 1.00 மணி தொடங்கி 3.30 மணிக்குள் நடைபெறும் என்று விஜய் ஆனந்த் சொன்னார்.

இதனிடையே கலைஞர் எம்.ஜி.ஆர் விஐய் ஆனந்தின் தாயார் திருமதி விஜயா பாலன் அவர்களின் திடீர்  மறைவு கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாகவும் அன்னாரைப் பிரிந்து துயரத்தில் இருக்கும் அண்ணன் எம்.ஜி.ஆர் விஜயசேகர், நண்பர் விஐய் ஆனந்த் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும்  தேசம் வலைத்தளத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம்   ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
Contact MG Vijai
012-6792930
MGR Vijayasegar
019-2891181

Comments