பரம்பதம் திரைப்பட வெற்றிக்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் டீசர்! அதிரடியான இசை, காட்சிகளுடன் பரபரப்பாக வெளியீடு கண்டது

பரம்பதம் திரைப்பட வெற்றிக்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் டீசர்!
அதிரடியான இசை, காட்சிகளுடன் பரபரப்பாக வெளியீடு கண்டது

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 21-தந்தை காட்டிய வழியில் கலைப்பயணத்தை தொடங்கியிருக்கும் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் "பரம்பதம்" திரைப்படத்திற்கான  டீசர்  விளம்பர காணொளி அதிரடியான இசை, காட்சிகளுடன் மிகவும் பரபரப்பாக வெளியீடு கண்டது.

வஜ்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்னேஷ் பிரபு எதிரிகளுடன் மோதும் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது. நாட்டின் மூத்த கலைஞர் ஐயா கே.எஸ்.மணியம்,  காந்திபன் என்ற பென்ஜி, கவிமாறன், உமாகாந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.


மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட படைப்பாக விரைவில் வெளிவரவிருக்கும்  "பரம்பதம்" திரைப்படத்திற்கான முன்னோட்ட விளம்பர காணொளி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த டீசர் படத்தை பார்க்க மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.


இந்த பரம்பதம் டீசர் மர்மமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பரம்பதம் திரைப்படம் என்ன கதை சொல்லப் போகிறது என்று பலருக்குத் தெரியாது.

ADVERTISEMENT ADVERTISEMENT

 ஒரு சிலருக்கு அதன் கதைசுருக்கம் என்னவென்று தெரிந்திருக்கலாம்.


கடந்த 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் காலத்தில்  உருவாக்கப்பட்ட கேம் போர்ட்  விளையாட்டை "பரமபதம்" திரைப்படமாக செதுக்கியுள்ளார் விக்னேஷ் பிரபு.


இந்த "பரம்பதம்" திரைப்படம் சாய் நந்தினி மூவி வேல்ட் நிறுவனத்தின் சார்பில் முனைவர் லட்சப்பிரபு, முனைவர் சக்கரவர்த்தி தயாரிப்பில் வடித்துள்ள  விக்னேஷ் பிரபு இதன் டீசர் தயாரிப்பிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டுள்ளார். இந்த "பரமபதம்" திரைப்படம்  வெற்றிநடை போட டீசர் அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Comments