யூபிஎஸ்ஆர் மாணவர்கள் 30 ஆயிரம் பேருக்கு பயன்தரும் பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேடு! இந்திய மாணவர்களின் கல்விக்கு ஸ்ரீ முருகன் நிலையத்தின் கடப்பாடு!

யூபிஎஸ்ஆர் மாணவர்கள் 30 ஆயிரம் பேருக்கு பயன்தரும் பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேடு!
இந்திய மாணவர்களின் கல்விக்கு ஸ்ரீ முருகன் நிலையத்தின் கடப்பாடு!

குணாளன் மணியம்
படங்கள்: ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 25-
மலேசிய இந்திய மாணவர்கள் கல்வி நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் 30 ஆயிரம் இந்திய யூபிஎஸ்ஆர் மாணவர்கள் பயன்தரும் வகையில் பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேட்டை உருவாக்கியுள்ளது.இந்த பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,500 மாதிரி தேர்வு கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதும் போது அவர்களின் திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்வழி மாணவர்கள் தங்கள் தவற்றை திருத்திக் கொண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற முடியும் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேடு நேற்று மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி்தொடங்கி செயல்பட தொடங்கியது. இதில் தேசிய மொழி, ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய நான்கு படங்கள் இணையதள பதிவேட்டி பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாடங்கள தொடர்பான 2,500 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதலாம். பதில் எழுதிய மறுவினாடி எத்தனை கேள்விகள் சரி என்ற தகவல் வெளிப்படும். இந்த இணையதள பதிவேட்டில் மாதந்தோறும் தேர்வு இடம்பெறும்.

ஒவ்வொரு மாதமும் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக மின்னியல் அகராதி, இரண்டாவது பரிசாக 500 வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரம், மூன்றாவது பரிசாக மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும்.ஆகையால், யூபிஎஸ்ஆர் மாணவர்கள் இந்த பிரம்மாஸ்தரா இலவச இணையதள பதிவேட்டில் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி இந்த இணையதள பதிவேடு அறிமுக விழாவில் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய தோற்றுநர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா வலியுறுத்தினார்.

இந்த பிரம்மாஸ்தரா அறிமுக நிகழ்வில் சைபர்ஜெயா அறிவியல் மருத்துவமனை கல்லூரி பல்கலைக்கழக வேந்தர்  டான்ஸ்ரீ டத்தோ ஆர்.பாலன், டத்தோ பி. காசி, முத்தையா, டத்தோ புரவி, பிரகாஷ் ராவ், யூபிஎஸ்ஆர் மாணவர்கள், பெற்றோர்கள் என்று சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இணையதள பதிவேட்டிற்கு www..smc.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Comments