சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" திரைப்படம் 50 திரையரங்குகளில் திரையேறி வருகிறது! திரைப்படத்தை பார்த்த மலேசிய ரசிகர்களுக்கு டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா நன்றி!

சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" திரைப்படம் 50 திரையரங்குகளில்
திரையேறி வருகிறது!
திரைப்படத்தை பார்த்த மலேசிய ரசிகர்களுக்கு டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா நன்றி!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச்.7-
       சினி சத்ரியா படநிறுவனம் சார்பில் டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் மார்ச் 7 தொடங்கி நாடு தழுவிய நிலையில் திரையேறி வரும்  "குற்றம் செய்யேல்"
திரைப்படத்தை பார்த்த  மலேசிய ரசிகர்களுக்கு டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதேநேரத்தில் படத்தை பார்க்காதவர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்று இருவருக்கும்  கேட்டுக் கொண்டனர்.

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் சமூக சீர்கெடுகளை படம்பிடித்து காட்டுவதுடன்  அதற்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படமாகும்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

 இதனை பார்த்த பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மலேசிய தயாரிப்பான இப்படத்தை மலேசியர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 தொடங்கி நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Comments