சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" மார்ச் 7இல் படம் பார்க்க ஜாங்கிரி நாயகன் விக்ரன் அழைப்பு

சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" 
மார்ச் 7இல் படம் பார்க்க ஜாங்கிரி நாயகன் விக்ரன் அழைப்பு

குணாளன் மணியம்


கோலாலம்பூர், மார்ச்.3-
       சினி சத்ரியா படநிறுவனம் சார்பில் டாக்டர் செல்லா தயாரிப்பில், பாரதிராஜா இணை தயாரிப்பில் மார்ச் 7 தொடங்கி மலேசிய திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கும் "குற்றம் செய்யேல்" திரைப்படத்தை பார்க்க வாருங்கள் என்று ஜாங்கிரி கதாநாயகன் விக்ரன் இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த "குற்றம் செய்யேல்" திரைப்படம் இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் சமூக சீர்கெடுகளை படம்பிடித்து காட்டுவதுடன்  அதற்கான தீர்வு எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் திரைப்படமாகும். மலேசிய தயாரிப்பான இப்படத்தை மலேசியர்கள் அனைவரும் கண்டுகளித்து ஆதரவு வழங்க வேண்டும் விக்ரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

மலேசியாவில்
படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென்னிந்திய நடிகரான போஸ் வெங்கடேஷ், விஜய் டிவி "கலக்கப் போவது யாரு" தீனா, இணை தயாரிப்பாளர் பாரதிராஜா ஆகிய மூவரும் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்துள்ளனர். இந்த "குற்றம்  செய்யேல்" திரைப்படம் மார்ச் 7 முதல் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 50 திரையரங்குகளில் திரையேறவிருப்பதால்  மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்கும்படி விக்ரன் வலியுறுத்தியுள்ளார்.

Comments