நம்பிக்கை கூட்டணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டது! செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெறும்! ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் நம்பிக்கை

நம்பிக்கை கூட்டணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டது!
செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெறும்!
ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் நம்பிக்கை

குணாளன் மணியம்

செமினி, மார்ச் 1-   
        நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கடந்த பொதுத் தேர்தலில்  சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதால் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு வழங்கிய வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதால் மக்கள் ஏமாற்றமடைந்து விட்டனர். இதனால் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னினி வேட்பாளர் அபார வெற்றி பெறுவார் என்று ம.இ.கா சிப்பாங் தொகுதித் தலைவருமான குணாளன் சொன்னார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த நம்பிக்கை கூட்டணியின் இந்திய அமைச்சர்கள் இன்று மௌனம் சாதித்து வருகின்றனர். இதுவே அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பொதுத்தேர்தல் முடிந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லலை. இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர். இதன் விளைவு கேமரன் மலை இடைத்தேர்தல் தோல்வி. இந்நிலையில் நம்பிக்கை கூட்டணிக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து சரிந்து வருவதால் செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக  வே.குணாளன் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டிக்கு பதில்  எஸ்எஸ்டி வரியை அமல்படுத்தி விட்டனர்.
இந்தியர்களின் அரசு துறை வேலை வாய்ப்பினை 10% சதவீதமாக உயர்த்துவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்படவில்லை.
ஜிஎல்சி நிறுவனங்களில் இந்தியர்களின் வேலை வாய்ப்பினை 10 சதவீதத்திற்கு உயர்த்த தவறி விட்டனர். எம்ஆர்எஸ்எம், தமிழ் இடைநிலைப் பள்ளி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments