ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் போட்டி! டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் எஸ்.ஸ்ரீராம்  போட்டி!
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச்  11-
ரந்தாவ் இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் போட்டியிடவிருப்பதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

டாக்டர் ஸ்ரீராம் படித்தவர். ரந்தாவ் தொகுதியில் மக்களுக்காக வேலை செய்தவர். ஆகையால், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

டாக்டர் ஸ்ரீராம் ரந்தவாவில் போட்டியிடுவது குறித்து உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நம்பிக்கை கூட்டணி கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT ADVERTISEMENT

 எல்லா வகையிலும் ஸ்ரீராம் பொருத்தமானவர் என்று முடிவு செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் சொன்னார்.

ரந்தாவ் இடைத்தேர்தல் ஏப்ரல் 13இல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30இல் நடைபெறும். ரந்தாவ் சட்டமன்றத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 427 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments