தேசிய முன்னனியில் ம.இ.கா, மசீசவின் நிலை என்ன? இரு கட்சிகளும் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது! - மத்திய செயற்குழு உறுப்பினர் புனிதன் பரமசிவம் கருத்து

தேசிய முன்னனியில் ம.இ.கா, மசீசவின் நிலை என்ன?
இரு கட்சிகளும் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது!
- மத்திய செயற்குழு உறுப்பினர் புனிதன் பரமசிவம் கருத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 6-
         தேசிய  முன்னனியில் தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு ம.இ.கா, மசீச ஆகிய
இரு கட்சிகளும் தங்கள் நிலை குறித்து முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும் என்று ம.இ.கா மத்திய செயற்குழு உறுப்பினர் புனிதன் பரமசிவம் கருத்துரைத்துள்ளார்.

தேசிய முன்னனி எனும் கூட்டணி தற்போதைய சூழலுக்கு தேவையான ஒன்றா? அம்னோ, பாஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. ஆனால், தேசிய முன்னனி- பாஸ் கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. அம்னோ- பாஸ் கூட்டணி எதிர்கட்சிகளின் தற்காலிக சித்து விளையாட்டு என்று புனிதன் கூறினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

பல்லின மக்களின் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மூன்று இனங்களை பிரதிநிதிக்கும் கூட்டணியாக தேசிய முன்னனி திகழ்ந்தது. ஆனால், அம்னோ தலைவர்கள் சிலரின் ஆணவப் பேச்சினால் அது கலைந்து வருகிறது. தேசிய முன்னனி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரியின் இனவாதப் பேச்சு உறுப்புக் கட்சிகளின் உணர்வுகளை சீண்டியுள்ளது. இதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நஸ்ரியை தலைமைச் செயலாளராக நியமைத்த போது ம.இ.கா, மசீசவின் நிலைபாட்டை கேட்கவில்லை. இது ஏன் என்று புனிதன் கேள்வி எழுப்பினார்.

தேசிய முன்னனியின் எதிர்காலம் குறித்து ம.இ.கா, மசீச முடிவு செய்ய வேண்டும். பாஸ் கட்சியின் உறவை தொடர வேண்டுமானால் பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் என்ன தவறு? பாஸ் கட்சி கேமரன் மலை இடைத்தேர்தலில் ம.இ.காவிற்கு முன்கூட்டிய ஆதரவு தெரிவித்திருந்தது. ம.இ.காவின் இந்த வியூகயுக்திதான் இரு இடைத்தேர்தல்களின் தேசிய முன்னனியின் வெற்றியை உறுதி செய்தது என்றார் புனிதன்.

ம.இ.கா இனியும் பேசாமல் இருக்க முடியாது. கட்சியின் நலன் கருதி ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஷ்வரன் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று புனிதன் பரமசிவம் வலியுறுத்தியுள்ளார்.

Comments