பிரசன்னா டீக்‌ஷாவை கண்டுபிடிக்க அமெரிக்க தூதரகம் (எப்பிஐ) உதவியை நாடப்படும் - இங்ஙாட் தலைவர் அருண் துரைசாமி திட்டவட்டம்

பிரசன்னா டீக்‌ஷாவை கண்டுபிடிக்க அமெரிக்க தூதரகம் (எப்பிஐ) உதவியை நாடப்படும்
- இங்ஙாட்  தலைவர் அருண் துரைசாமி திட்டவட்டம்
 
கோலாலம்பூர், மார்ச்.14-
    நீண்ட காலம் தேடப்பட்டு வரும் திருமதி இந்திராகாந்தியின் கடைசி மகள் பிரசன்னா டீக்‌ஷாவை (வயது 11) கண்டுபிடிப்பதற்கு தாங்கள் மலேசியாவில் உள்ள அமெரிக்கா தூதரகத்தின் வழியாக  (FBI) உதவியை நாடவுள்ளோம் என்று இந்திராகாந்தியின் விவகார சிறப்பு நடவடிக்கை குழுவின் (இங்ஙாட்) தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.
 
இந்திராகாந்தியின் விவகாரம் மலேசிய மக்களுக்கு புதியது அல்ல. சுமார் 10 ஆண்டுகளாக இந்த விவகாரம் அரங்கேறி வருகின்றது.
முன்னாள் கணவரிடமிருந்து (முகமட் ரிடுவான்) தனது மூன்று பிள்ளைகளை மீட்க இந்திராகாந்தி பெரும் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

 மூன்று   பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் நீதிமன்றம் வழங்கிய போதிலும் கடைசி மகள் பிரசன்னா டீக்‌ஷாவை மட்டும் முன்னாள் கணவர் ஒப்படைக்கவில்லை. அக்குழந்தையை கண்டுபிடித்து இந்திராகாந்தியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றமும் காவல் துறைக்கு உத்தரவு  பிரப்பித்தது.
 
ஆயினும் இன்று வரை அக்குழந்தையை காவல்துறை கண்டு பிடிக்கவில்லை. இந்த தாமதம் இவ்விவகாரத்தில் அவர்களின் மெத்தன போக்கை வெளிகாட்டும் வகையில் உள்ளது. தனது குழந்தையின் நிலை அறியாது தவிக்கும் இந்திராகாந்திக்கு உதவவே இந்த “இங்ஙாட்” குழு துவக்கப்பட்டது. நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
 
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் அண்மையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தையும் நாங்கள் நடத்தினோம். அக்கூட்டத்தில் பிரசன்னாவை கண்டு பிடிக்க முனைப்பு காட்டும்படி காவல்துறையை நாங்கள் வழியுறுத்தினோம். ஆனாலும் இன்றுவரை அதற்கும் முழுமையான - நிலையான பதில் கிடைக்கவில்லை.

நாங்களும் பிரசன்னா குறித்து தேசிய பதிவு இலாகா, குடி நுழைவு துறை இலாகா, தேசிய மத விவகார இலாகா மற்றும் தேசிய சுகாதார துறை வரை விசாரித்து விட்டோம். எந்தவித பதிலும் இல்லை. அவர் இந்த நாட்டில்தான் வாழ்கிறார் என்பதற்கும் எந்தவொறு சான்றும் கிடையாது. நாம் தாமதிக்கும் ஒவ்வொறு கனமும் பிரசன்னாவின் பாதுகாப்பிற்கு சவாலாக அமைகிறது.
ஆதலால் இனி இவ்விவகாரத்தை மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளோம் என அருண் குறிப்பிட்டார்.

காரணம் இந்திராகாந்தியின் விவகாரத்தை அமெரிக்க தூதரகம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்திராகாந்தியின் மன வலிமையை பாராட்டி கடந்த வருடம் அவருக்கு சிறப்பு விருதும் இத்தூதரகம் வழங்கி கெளரவித்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால் பிரசன்னாவின் விவகாரத்தையும் அவர்களது பார்வைக்கு கொண்டு சென்று உதவி நாடலாம் என முடிவெடுத்துள்ளோம்.  அமெரிக்காவின் (FBI) எனப்படும் சிறப்பு விசாரணை இலாகாவின் திறன் உலகம் அறிந்தது. மேலும் அமெரிக்க அரசாங்கம் மனித கடத்தல் விவகாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி செயல்ப்படும். எனவே இவ்விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்து செயல்பட்டால் நல்லதோர் தீர்வு விரைவில் கிடைக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஆகவே வரும் மார்ச் 19ஆம் தேதியன்று தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவியோடு (FBI) நாடியுள்ளோம். இவ்விவகாரம் தொடர்பாக இது நாள் வரை நாங்கள் திரட்டிய ஆதார ஆவணங்களை வழங்கி அவர்கள் விசாரணை மேற்கொள்ள ஒரு சங்க நடக்கவிருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்கா வரை சென்று போராட நாங்கள் தயார் என்றும் அருண் திட்டவட்டமாக கூறினார்.

Comments