எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்! குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் முயற்சியை தொடர வேண்டும் -ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் முயற்சியை தொடர வேண்டும்
-ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 14-
நாடு தழுவிய நிலையில் மார்ச் 14 வியாழக்கிழமை வெளிவந்த எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் மனதை தளர விடாமல் முயற்சியைத் தொடர வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுனார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் அது மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. எனினும் எல்லோரும் சிறந்த தேர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவரவர் நிலைக்கு ஏற்ப கல்வி அமையும். ஆகையால், எஸ்பிஎம்  தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்று விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குறைந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் படிக்க விரும்பும் துறைகளை நன்கு ஆராய்ந்து சரியாக தேர்வு செய்ய வேண்டும். அதேநேரத்தில் தோல்வி கண்ட மாணவர்கள் மனம் தளரக்கூடாது. இந்நாட்டில் பல தொழில் துறைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். எனினும் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்வு செய்யும்படி மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ  எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆலோசனை கூறினார்.

எஸ்பிஎம், எஸ்டிபிம் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் டான்ஸ்ரீ எஷ்.ஏ.விக்னேஷ்வரன் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Comments