இரண்டாவது வாரத்தில் சினி சத்ரியாவின் "குற்றம் செய்யேல்" திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்க்க அழைப்பு பார்த்தவர்களுக்கு நன்றி

எஸ்பிஎம் தேர்வில் 11 “ஏ” பெற்று சாலினி கிருஷ்ணன் சாதனை!
 -மறைந்த தந்தையின் கனவை நினைவாக்கினார்

பூச்சோங், மார்ச்.18-
     பூசாட் பண்டார் பூச்சோங் இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சாலினி த/பெ கிருஷ்ணன் எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளார்.

பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் இத்தேர்வில் தமிழ் மொழி , தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களிலும் “ஏ” தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரின் தந்தை கடந்த வருடம் மே மாதம் மரணமடைந்த போதிலும் அவரின் கனவை தாம் நினைவேற்ற வேண்டும் என்றே ஒரே நோக்கில் தாம் செயல்பட்டதாக சாலினி உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பல் மருத்துவர் ஆவதே தமது குறிக்கோள் என்றும் அதனை அடைவதற்கு தாம் கடுமையாக உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவரின் தாயார் சித்திரா தற்பொழுது குழந்தைகளை பராமரித்து வருமானம் ஈட்டி குடும்பத்தை கவனித்து வருகின்றார். மேலும் சாலினியின் சகோதரி மாலினி கடந்த வருடம் எஸ்பிஎம் தேர்வில் 7ஏ பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments