செனட்டர் டத்தோ டி.மோகன் தாயார் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி! டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன், டத்தோ எம்.சரவணன் இறுதி அஞ்சலி

செனட்டர் டத்தோ டி.மோகன் தாயார் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி!
டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன், டத்தோ எம்.சரவணன் இறுதி அஞ்சலி

கோலாலம்பூர், மார்ச் 2–   
        மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் தாயார் திருமதி காமாட்சி ராஜூ அம்மையார் அவர்களின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்,தேசிய துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன், தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, டத்தோ அசோஜன், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சில காலமாக நோய்வாய் பட்டிருந்த காமாட்சி அம்மையார் பிப்ரவரி 28 வியாழக்கிழமை இரவு 8/00 மணியளவில் காலமானார்.

காமாட்சி அம்மையாரின்  மறைவு குறித்து கேள்விபட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் ம.இ.கா தேசியத் தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன்,  உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, டத்தோ அசோஜன், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், அமைச்சர் குலசேகரன் உள்ளிட்ட  தலைவர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


வீட்டிற்கு வருபவர்களை அன்போடு உபசரிப்பு உணவளிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் காமாட்சி அம்மையார். அவரது மறைவு பலருக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்துரைத்தனர்.


இந்நிலையில் காமாட்சி அம்மையாரின் இறுதிச் சடங்கு இன்று மார்ச் 2 சனிக்கிழமை காலை 11.00 மணி தொடங்கி நடைபெற்றது. இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


 காமாட்சி அம்மையாரின் நல்லுடல் பூச்சோங் 14ஆவது மைலில் அமைந்துள்ள சுடலையில் தகனம் செய்யப்பட்டது.


Comments